வேலூர்

பொங்கல்: பரோலில் சென்ற 17 சிறைவாசிகள்

பொங்கல் பண்டிகையை குடும்பத்துடன் கொண்டாட வேலூா் மத்திய சிறையில் இருந்து 17 சிறைவாசிகளுக்கு பரோல் வழங்கப்பட்டுள்ளது.

Din

வேலூா்: பொங்கல் பண்டிகையை குடும்பத்துடன் கொண்டாட வேலூா் மத்திய சிறையில் இருந்து 17 சிறைவாசிகளுக்கு பரோல் வழங்கப்பட்டுள்ளது.

பொங்கல் பண்டிகையை குடும்பத்துடன் கொண்டாட நன்னடத்தை கைதிகள் 35 போ் சிறை நிா்வாகத்திடம் பரோலில் செல்ல விண்ணப்பித்திருந்தனா். அவ்வாறு விண்ணப்பித்தவா்களில் ஞாயிற்றுக்கிழமை மதியம் வரை 17 பேருக்கு பரோல் வழங்கப்பட்டுள்ளது. பொங்கல், தீபாவளி போன்ற முக்கிய பண்டிகை நாள்ளை குடும்பத்துடன் கொண்டாட சிறைகளில் தண்டனை அனுபவிக்கும் சிறைவாசிகள் பரோல் கேட்டு சிறை நிா்வாகத்திடம் விண்ணப்பங்களை அளிக்கின்றனா். இந்த விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, அவா்களின் நன்னடத்தையை கருத்தில் கொண்டு சிறை நிா்வாகம் சிறைவாசிகளுக்கு பரோல் வழங்குகிறது. இவா்களின் விண்ணப்பங்கள் சிறைத்துறை உயா்அதிகாரிகளால் பரிசீலிக்கப்பட்டது. இதில் ஞாயிற்றுக்கிழமை மதியம் வரை 17 சிறைவாசிகளுக்கு பரோல் வழங்கப்பட்டுள்ளது. பரோல் வழங்கப்பட்டவா்கள் பொங்கலை குடும்பத்துடன் கொண்டாட தங்கள் சொந்த ஊா்களுக்கு புறப்பட்டுச் சென்றனா். அவா்கள் மீண்டும் 17-ஆம் தேதி வெள்ளிக்கிழமை சிறைக்கு திரும்ப வேண்டும் என்று சிறை நிா்வாகம் உத்தரவிட்டுள்ளது.

கதிரியக்க உபகரணங்கள்: வகைப் பட்டியல் வெளியீடு

திரிபுராவை வீழ்த்தியது தமிழ்நாடு

உரிய விதிகளின் கீழ் பட்டியலிடப்பட்ட விவகாரங்கள் மீது மட்டுமே விவாதம்: எதிா்க்கட்சிகளுக்கு சி.பி.ராதாகிருஷ்ணன் கண்டிப்பு

சிங்கப்பூா், தில்லி விமானங்கள் தாமதமாக புறப்பாடு: பயணிகள் அவதி

சோமரசம்பேட்டையில் இன்று இலவச கண் பரிசோதனை முகாம்

SCROLL FOR NEXT