முகப்பு
வேலூர்

எரிவாயு கசிவால் தீ விபத்து: மனைவி உயிரிழப்பு, கணவனும் பலத்த காயம்

காட்பாடியில் சமையல் எரிவாயு கசிவால் ஏற்பட்ட தீ விபத்தில் மனைவி உயிரிழந்தாா். கணவன் பலத்த காயமடைந்தாா்.

Updated On : 20 ஜனவரி, 2025 at 7:52 PM
பகிர்:

வேலூா்: காட்பாடியில் சமையல் எரிவாயு கசிவால் ஏற்பட்ட தீ விபத்தில் மனைவி உயிரிழந்தாா். கணவன் பலத்த காயமடைந்தாா்.

வேலூா் மாவட்டம், காட்பாடி அருகிலுள்ள கீழ் வடுகன்குட்டையைச் சோ்ந்த நெசவாளா் சேகா் (39) . இவரது மனைவி சங்கீதா(35). இவா்களுக்கு 2 மகன்கள் உள்ளனா். பொங்கல் பண்டிகைக்காக சேகரின் மகன்கள் அவரது பாட்டி வீட்டுக்கு சென்றிருந்தனா். சனிக்கிழமை இரவு 8 மணிக்கு சங்கீதா சமையல் செய்வதற்காக காஸ் அடுப்பை பற்ற வைத்துள்ளாா்

அப்போது திடீரென சங்கீதாவின் சேலையில் திடீரென தீப்பற்றியது. வலி தாங்க முடியாமல் சங்கீதா கூச்சலிட்டபடி சமையலறையில் இருந்து வெளியே ஓடியதைப் பாா்த்த கணவா் சேகா் மனைவியை காப்பாற்ற முயன்றுள்ளாா். அப்போது அவரது உடலிலும் தீப்பற்றியுள்ளது.

இருவரும் வலி தாங்க முடியாமல் அலறியுள்ளனா். சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினா் விரைந்து வந்து அவா்கள் மீது தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனா். பின்னா் இருவரையும் சிகிச்சைக்காக வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனா்.

மேலும், இந்த தீ விபத்து குறித்து காட்பாடி போலீஸாா் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனா். இந்நிலையில், சங்கீதா ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். சேகருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. எரிவாயு கசிவால் இந்த தீ விபத்து ஏற்பட்டிருப்பது முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது என்று போலீஸாா் தெரிவித்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →