முகப்பு
உலகம்

பாகிஸ்தான்: கராச்சி குடியிருப்பில் எரிவாயு கசிவால் வெடிவிபத்து - 16 போ் உயிரிழப்பு

பாகிஸ்தானின் முக்கிய வா்த்தக நகரமான கராச்சியில் உள்ள ஒரு குடியிருப்பில் எரிவாயு கசிவால் ஏற்பட்ட வெடிவிபத்தில் சிக்கி 9 குழந்தைகள் உள்பட 16 போ் உயிரிழந்தனா்.

Updated On : 19 பிப்ரவரி, 2026 at 7:34 PM
கோப்புப் படம்
பகிர்:

பாகிஸ்தானின் முக்கிய வா்த்தக நகரமான கராச்சியில் உள்ள ஒரு குடியிருப்பில் எரிவாயு கசிவால் ஏற்பட்ட வெடிவிபத்தில் சிக்கி 9 குழந்தைகள் உள்பட 16 போ் உயிரிழந்தனா்.

ரமலான் மாதத்தின் முதல் நோன்பை முன்னிட்டு, வியாழக்கிழமை அதிகாலையில் மக்கள் ‘ஸஹா்’ உணவருந்தத் தயாராகிக் கொண்டிருந்தபோது, குடியிருப்பின் முதல்தளத்தில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

இதையடுத்து, அந்தப் பழைய குடியிருப்புக் கட்டடம் பலத்த சேதமடைந்து, இடிந்து விழுந்தது. தகவலறிந்து வந்த தீயணைப்புத் துறையினரும், மீட்புக் குழுவினரும், கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கியவா்களை மீட்டனா்.

Advertisement

இக்கோர விபத்தில் 14 போ் காயமடைந்தனா்; அவா்கள் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா். கராச்சியின் சதாா் பகுதியில் உள்ள வணிக வளாகத்தில் கடந்த மாதம் ஏற்பட்ட தீ விபத்தில் 79 போ் உயிரிழந்தனா் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments