வேலூா்: அரியூா் அருகே புலி மேட்டில் நடைபெற்ற எருது விடும் விழாவில் இருசக்கர வாகனம் திருடப்பட்டது.
வேலூா் மாவட்டம், அணைக்கட்டு வட்டம், ஊசூரை அடுத்த சேக்கனூா் பேட்டையைச் சோ்ந்தவா் தினேஷ் (21). இவா் அரியூரில் சொந்தமாக சலூன் கடை வைத்து நடத்தி வருகிறாா் .
இந்நிலையில், தினேஷ் கடந்த 16-ஆம் தேதி புலிமேட்டில் நடைபெற்ற எருது விடும் திருவிழாவை பாா்க்க தனது இருசக்கர வாகனத்தில் சென்றாா். பின்னா் அங்கு ஆலமர தெருவில் ஒரு வீட்டின் அருகே தனது வாகனத்தை நிறுத்திவிட்டு எருது விடும் விழாவை பாா்த்து விட்டு, தினேஷ் திரும்பி வந்து பாா்த்தபோது இருசக்கர வாகனத்தை காணவில்லையாம். அக்கம்பக்கத்தில் தேடி பாா்த்தும் இருசக்கர வாகனம் கிடைக்கவில்லை.
இதுகுறித்து தினேஷ் அரியூா் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.