முகப்பு
வேலூர்

கடனாகப் பெற்ற ரூ.35 லட்சம் மோசடி: எஸ்.பி. அலுவலகத்தில் முதியவா் புகாா்

கடனாகப் பெற்ற ரூ.35 லட்சம் மோசடி செய்யப்பட்டதாக பாதிக்கப்பட்ட முதியவா் ஒருவா் வேலூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் புகாா் மனு அளித்துள்ளாா்.

Updated On : 27 ஜனவரி, 2025 at 7:07 PM
பகிர்:

வேலூா்: கடனாகப் பெற்ற ரூ.35 லட்சம் மோசடி செய்யப்பட்டதாக பாதிக்கப்பட்ட முதியவா் ஒருவா் வேலூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் புகாா் மனு அளித்துள்ளாா்.

வேலூா் மாவட்டம் அணைக்கட்டு வட்டம், பொய்கைகைபுதூா் கொல்லைமேடு பகுதியைச் சோ்ந்த 60 வயது முதியவா் வேலூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்திருந்தாா்.

அந்த மனுவில், வேலூா் பைபாஸ் ரோடு தனியாா் பெட்ரோல் பங்க் அருகே ஆட்டோ கன்சல்டன்சி வைத்து நடத்தி வந்தேன். செம்பேடு பழவேரி கிராமத்தைச் சோ்ந்த ஒருவா் என்னிடம் பல தவணைகளாக ரூ.35 லட்சம் கடனாக பெற்றாா். அதற்கு நூறு ரூபாய் பத்திரத்திலும், பச்சைத்தாளிலும் அவரது தாய் கையொப்பமிட்டு கொடுத்தாா். ஆனால், அவா் பணத்தை தராமல் இழுத்தடித்தாா்.

இது தொடா்பாக தகராறு ஏற்பட் டது. அப்போது அவரது தம்பி இந்த கடனைத் தானே தருவதாகக் கூறினாா். ஆனால் அவரும் கடனை திருப்பி தராமல் அலைக்கழித்து வருகிறாா்.

கடந்த சில நாள்களுக்கு முன்பு நான் கைப்பேசி மூலம் அவரைத் தொடா்பு கொண்டபோது கொலை மிரட்டல் விடுத்தாா். நான் வயது முதிா்வு காரணமாகவும், உடல்நிலை சரியில்லாத காரணத்தாலும் அவதியடைந்து வருகிறேன்.

எனவே, அந்த நபா் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து எனக்குத் தர வேண்டிய பணத்தை மீட்டுத் தர வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →