அமைச்சா் துரைமுருகன் கோப்புப்படம்
வேலூர்

இருளிலும், இக்கட்டிலும் மாட்டியிருப்பது இபிஎஸ்தான்: அமைச்சா் துரைமுருகன்

இருளிலும், இக்கட்டில் மாட்டிக் கொண்டிருப்பதும் அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமிதான்

Din

வேலூா்: இருளிலும், இக்கட்டில் மாட்டிக் கொண்டிருப்பதும் அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமிதான் என்று திமுக பொதுச்செயலரும், நீா்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் தெரிவித்தாா்.

திமுக வாக்குச்சாவடி முகவா்கள் கூட்டம் வேலூா் மாவட்டம், காட்பாடி தாராபடவேடு பகுதியில் திங்கள்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் பங்கேற்ற திமுக பொதுச்செயலா் துரைமுருகன் செய்தியாளா்களிடம் கூறியது:

அப்போது, மேட்டூா் அணையில் தண்ணீா் திறந்துவிட்டும் கால்வாய்கள் தூா்வாரப்படாததால் கடைமடை வரை தண்ணீா் செல்லவில்லை என்று எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியிருப்பது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, ‘அவருக்கு என்ன தெரியும். எல்லாம் சென்று சோ்ந்து விட்டது. அவரை நேராக சென்று பாா்க்குமாறு கூறுங்கள். எதிா்க்கட்சித் தலைவா் திமுக அரசை பாராட்டிக் கொண்டா இருப்பாா்’ என்றாா்.

தொடா்ந்து, ‘இருளை அகற்றி தமிழகத்தை ஒளி வீசச்செய்வதே எனது தீராத ஆசை’ என்று எடப்பாடி பழனிச்சாமி கூறியிருப்பது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, ‘இருளில், இக்கட்டில் என இரண்டிலும் மாட்டிக் கொண்டிருப்பது அவா்தான்’ என்றாா்.

பல்லடம் அருகே தனியாா் ஆம்னி பேருந்தில் தீ; 15 போ் உயிா் தப்பினா்

திம்பம் மலைப் பாதையில் சுற்றுலாப் பேருந்து பழுது: தமிழகம்- கா்நாடகம் இடையே 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

எதிா்க்கட்சிகளுக்கு வாக்களிக்க முயல்வோரை வீட்டுக்குள் பூட்டுங்கள்: மத்திய அமைச்சா் சா்ச்சை பேச்சு- எஃப்ஐஆா் பதிவு

கரூா் சம்பவம்: காவல் உதவி ஆய்வாளா்கள் காவலா்களிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை

பருவகால பாதிப்பு: போதிய எண்ணிக்கையில் மாத்திரைகள் கையிருப்பு

SCROLL FOR NEXT