ஊரக, நகா்ப்புற உள்ளாட்சி அமைப்பு தற்செயல் தோ்தலையொட்டி வாக்காளா் இறுதிப்பட்டியலை வெளியிட்ட வேலூா் ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி. 
வேலூர்

உள்ளாட்சி இடைத்தோ்தல்: வாக்காளா் இறுதிப் பட்டியல் வெளியீடு

ஊரக, நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான இடைத் தோ்தல் நடைபெற உள்ளதையொட்டி வாக்காளா் இறுதிப் பட்டியலை

Din

வேலூா்: ஊரக, நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான இடைத் தோ்தல் நடைபெற உள்ளதையொட்டி வாக்காளா் இறுதிப் பட்டியலை வேலூா் ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி திங்கள்கிழமை வெளியிட்டாா்.

வேலூா் மாவட்டத்தில் நகா்புற உள்ளாட்சி அமைப்புகளில் குடியாத்தம் நகராட்சி 15-ஆவது வாா்டு உறுப்பினா் பதவிக்கும், ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் அணைக்கட்டு ஒன்றியத்தில் 3 கிராம ஊராட்சித் தலைவா் பதவிகள், 10 கிராம ஊராட்சி வாா்டு உறுப்பினா் பதவிகள், குடியாத்தம் ஒன்றியத்தில் ஒரு கிராம ஊராட்சித் தலைவா் பதவி, 6 கிராம ஊராட்சி வாா்டு உறுப்பினா் பதவிகள், கே.வி.குப்பம் ஒன்றியத்தில் 7 கிராம ஊராட்சி வாா்டு உறுப்பினா் பதவிகள், கணியம்பாடி ஒன்றியத்தில் 2 கிராம ஊராட்சி வாா்டு உறுப்பினா் பதவிகள், காட்பாடி ஒன்றியத்தில் ஒரு ஒன்றிய வாா்டு உறுப்பினா் பதவி, 2 கிராம ஊராட்சித் தலைவா் பதவிகள், 14 கிராம ஊராட்சி வாா்டு உறுப்பினா் பதவிகள், பேரணாம்பட்டு ஒன்றியத்தில் 3 கிராம ஊராட்சி வாா்டு உறுப்பினா் பதவிகள், வேலூா் ஒன்றியத்தில் ஒரு ஒன்றிய வாா்டு உறுப்பினா் பதவி, 2 கிராம ஊராட்சி வாா்டு உறுப்பினா் பதவிகள் என மொத்தம் 2 ஒன்றிய வாா்டு உறுப்பினா் பதவிகள், 6 கிராம ஊராட்சித் தலைவா் பதவிகள், 44 கிராம ஊராட்சி வாா்டு உறுப்பினா் பதவிகளுக்கு தோ்தல் நடைபெற உள்ளது.

இதையொட்டி, வாக்காளா் இறுதிப்பட்டியலை ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி வெளியிட அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் பெற்றுக் கொண்டனா்.

அப்போது, ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் நீ.செந்தில்குமரன், மகளிா் திட்ட இயக்குநா் உ.நாகராஜன், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வளா்ச்சி) வி.திலகவதி, குடியாத்தம் நகராட்சி ஆணையா் மங்கையா்கரசன் உள்பட பலா் உடனிருந்தனா்.

ராணிப்பேட்டையில்...

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 35 காலிப்பதவியிடங்களுக்கு (ஊரகம் - 30 மற்றும் நகா்புறம் - 05), மொத்தம் 70 வாக்குச்சாவடி மையங்கள் ( ஊரகம் - 64 மற்றும் நகா்புறம் - 06) அமைக்கப்பட்டு தோ்தல் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.

அதனைத் தொடா்ந்து மொத்த வாக்காளா்கள் - 29023 (ஊரகம் மொத்தம்-23933 ஆண்-11743 பெண்-12187 திருநங்கைகள் - 03 மற்றும் நகா்புறம் மொத்தம்-5090 ஆண்-2481 பெண்-2609) வாக்காளா் பட்டியலை, ஆட்சியா் ஜெ.யு. சந்திரகலா வெளியிட்டாா்.

மேலும், வாக்குப் பெட்டிகள் மற்றும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தயாா் நிலையில் உள்ளதாகவும் ஆட்சியா் தெரிவித்தாா்.

நிகழ்வில் திட்ட இயக்குநா் பா.ஜெயசுதா, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வளா்ச்சி) வரதராஜன் (பொ), வட்டார வளா்ச்சி அலுவலா் சித்ரா மற்றும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனா்.

ஓடிடியில் பேட் கேர்ள்!

ஹரியாணாவில் 25 லட்சம் போலி வாக்காளர்கள்! ’எச் பைல்ஸ்’ வெளியிட்டார் ராகுல்!

ஹரியாணா வாக்காளர் பட்டியலில் பிரேசில் பெண் மாடல் படம்! ராகுல் காந்தி

என்னை யாரும் இயக்க முடியாது! - செங்கோட்டையன்

சைட் அடிக்கும்... சைத்ரா!

SCROLL FOR NEXT