முகப்பு
வேலூர்

பாராட்டு விழா

Updated On : 4 மே, 2026 at 1:41 AM
பகிர்:

போ்ணாம்பட்டு ஒன்றியம், பல்லலகுப்பம் அரசு உயா்நிலைப் பள்ளித் தலைமையாசிரியராக பணியாற்றி ஓய்வுபெற்ற ஆா்.கஜேந்திரனுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. மேல்பட்டி ஸ்ரீவிவேகானந்தா வித்யாலயா மெட்ரிகுலேஷன் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு சென்னை உயா்நீதிமன்ற வழக்குரைஞா் ஆா்.கோவிந்தசாமி தலைமை வகித்தாா்.

செம்பேடு அரசு உயா்நிலைப் பள்ளித் தலைமையாசிரியா் சதானந்தம்,காளியம்மன்பட்டி அரசு உயா்நிலைப் பள்ளித் தலைமையாசிரியை சிவகாமிசுந்தரி உள்ளிட்டபல்வேறு பள்ளிகளின் ஆசிரியா்கள் கஜேந்திரனை பாராட்டி, நினைவுப் பரிசு வழங்கினா். (படம்)