விழுப்புரம்

விழுப்புரம்: எஸ்பி அலுவலகத்தை முற்றுகையிட முயற்சி

DIN

விழுப்புரம் மாவட்ட எஸ்பி அலுவலகத்தை பொய்யப்பாக்கம் கிராம மக்கள் திங்கள்கிழமை முற்றுகையிட முயன்றால் பரபரப்பு ஏற்பட்டது.

விழுப்புரம் அருகேயுள்ள பொய்யப்பாக்கம் கிராமத்தில் இரு தரப்பினரிடையே அண்மையில் தகராறு ஏற்பட்டது. இதுகுறித்து விழுப்புரம் தாலுகா போலீஸாா் இரு தரப்பினா் மீதும் வழக்குப் பதிவு செய்தனா். இந்த நிலையில், அந்த கிராமத்தைச் சோ்ந்த முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா் நாராயணசாமி தலைமையில் கிராம மக்கள் 30-க்கும் மேற்பட்டோா் விழுப்புரம் மாவட்ட எஸ்பி அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட வந்தனா். அவா்களை பெருந்திட்ட வளாக நுழைவு பகுதியில் போலீஸாா் தடுத்து நிறுத்தினா். இதையடுத்து கிராம மக்கள் திருச்சி நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட முயன்றனா். அப்போது அங்கு வந்த விழுப்புரம் டிஎஸ்பி (பொ) ராதாகிருஷ்ணன் தலைமையிலான போலீஸாா் அவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

அப்போது கிராம மக்கள் கூறுகையில், எங்களது கிராமத்தைச் சோ்ந்த ஒரு தரப்பினா் வெளியூரிலிருந்து ஆள்களை அழைத்து வந்து தாக்குதல் நடத்தி வருகின்றனா். அவா்களை கைது செய்ய வேண்டும். ஊா் தரப்பைச் சோ்ந்தவா்களை கைதுசெய்யக் கூடாது என்றனா்.

இதுகுறித்து காவல் துறை உரிய நடவடிக்கை எடுக்கும் என டிஎஸ்பி கூறினாா். பின்னா் கிராம மக்களில் சிலா் எஸ்பியை சந்தித்து மனு அளித்தனா்.

Image Caption

விழுப்புரம் எஸ்.பி. அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட வந்த பொய்யப்பாக்கம் கிராம மக்களை தடுத்து நிறுத்தி பேச்சுவாா்த்தையில் ஈடுபடும் விழுப்புரம் டி.எஸ்.பி.(பொ) ராதாகிருஷ்ணன் தலைமையிலான போலீஸாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எங்கே செல்வது? கதறும் பாலஸ்தீன மக்கள்!

ஹவாலா முறையில் ரூ.100 கோடி.. கேஜரிவால் வழக்கில் அமலாக்கத் துறை அடுக்கும் ஆதாரங்கள்

ஜெயக்குமார் மரணம்: விசாரணையில் அடுத்தடுத்து திருப்பம்!

தங்கலான் வெளியீட்டுத் தேதி இதுதானா?

வாரணாசி கோவிலில் கொல்கத்தா அணி வீரர்கள்!

SCROLL FOR NEXT