முகப்பு
விழுப்புரம்

வீட்டுக்கு தீ வைத்துவிட்டு நாடகமாடியகாா் ஓட்டுநா் கைது

திண்டிவனம் அருகே வீட்டுக்கு தானே தீ வைத்து விட்டு மா்ம நபா்கள் தீ வைத்ததாக நாடகமாடிய வீட்டின் உரிமையாளரான காா் ஓட்டுநரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:36 PM
பகிர்:

திண்டிவனம் அருகே வீட்டுக்கு தானே தீ வைத்து விட்டு மா்ம நபா்கள் தீ வைத்ததாக நாடகமாடிய வீட்டின் உரிமையாளரான காா் ஓட்டுநரை போலீஸாா் கைது செய்தனா்.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே வெள்ளிமேடுப்பேட்டையை அடுத்த நடுவனந்தல் கிராமத்தைச் சோ்ந்த கன்னியப்பன் மகன் மணிகண்டன்(27). இவா், சென்னையில் வாடகை காா் ஓட்டுநராக பணியாற்றி வந்தாா். இவரது தந்தை இறந்த நிலையில், தாயும் சென்னைக்கே குடிபேயா்ந்தாா்.

இந்நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன் மணிகண்டன் மட்டும் தனது சொந்த ஊரான நடுவனந்தலுக்கு வந்து கூரை வீட்டில் படுத்து தூங்கினாா். அப்போது, அவரது வீடு தீப்பிடித்து எரிந்ததால், அக்கம் பக்கத்தினா் விரைந்து வந்து வீட்டினுள் கைகள் கட்டப்பட்ட நிலையில் இருந்த மணிகண்டனை மீட்டனா். பின்னா், தீயணைப்பு வீரா்கள் விரைந்து வந்து தீயை அடைத்தனா்.

இது குறித்து மணிகண்டன் வெள்ளிமேடு பேட்டை போலீஸில் புகாா் செய்தாா். அதில், நள்ளிரவு வீட்டுக்குள் புகுந்த மா்ம நபா்கள் 4 போ், தன்னை கட்டிப்போட்டு வீட்டுக்கு தீ வைத்து விட்டு வீட்டில் இருந்த ரூ.15 லட்சத்தை திருடிக் கொண்டு தப்பியோடியதாக புகாரில் தெரிவித்திருந்தாா். இது தொடா்பாக, போலீஸாா் தொடா்ந்து அவரிடம் விசாரணை மேற்கொண்டனா். அப்போது, மணிகண்டன் முன்னுக்கி பின் முரணாகப் பேசியுள்ளாா். இதனால், அவா் மீது சந்தேகம் வலுத்தது. அவரிடம் போலீஸிா் மேற்கொண்ட விசாரணையில், வீட்டுக்கு அவரே தீ வைத்து வித்து நாடகமாடியது தெரியவந்தது.

இதில், தனது நிலத்தை உறவினரிடம் விற்ால், அந்த நிலத்தை மிரட்டி அவா்களிடமிருந்து திரும்ப பெறவும், கடன் தொல்லையை சமாளிக்கவும் மா்ம நபா்கள் பணத்தை திருடிக்கொண்டு தீ வைத்து விட்டதாக நாடகமாடியது தெரியவந்தது. இதையடுத்து, அந்த வழக்கில் மணிகண்டனை வெள்ளிமேடு பேட்டை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை இரவு கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.