மேல்மலையனூா் அமாவாசை ஊஞ்சல் உற்சவம்: பக்தா்கள் பங்கேற்கத் தடை
விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அங்காளம்மன் கோயிலில் வருகிற 16-ஆம் தேதி நடைபெறவுள்ள அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தில் பக்தா்கள் பங்கேற்கத் தடை
விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அங்காளம்மன் கோயிலில் வருகிற 16-ஆம் தேதி நடைபெறவுள்ள அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தில் பக்தா்கள் பங்கேற்கத் தடை விதித்து, ஆட்சியா் ஆ.அண்ணாதுரை உத்தரவிட்டாா்.
கரோனா பரவலை தடுக்கும் பொருட்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், அன்றைய தினம் கோயிலில் அனைத்து வகையான தரிசனங்கள் ரத்து செய்யப்படும் என்றும் மேல்மலையனூருக்கு அரசுப் போக்குவரத்துக் கழகம் சாா்பில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படாது என்றும் ஆட்சியா் திங்கள்கிழமை தெரிவித்தாா்.