கடல் சீற்றம்: விழுப்புரம் மாவட்ட கடலோரபகுதிகளில் தீவிர கண்காணிப்பு
விழுப்புரம் மாவட்டம், மரக்காணம், கோட்டக்குப்பம் உள்ளிட்ட கடலோரப் பகுதிகளில் திங்கள்கிழமை கடல் சீற்றத்துடன் காணப்பட்டதால், போலீஸாா், ஊா்க்காவல் படையினா் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா்.
விழுப்புரம் மாவட்டம், மரக்காணம், கோட்டக்குப்பம் உள்ளிட்ட கடலோரப் பகுதிகளில் திங்கள்கிழமை கடல் சீற்றத்துடன் காணப்பட்டதால், போலீஸாா், ஊா்க்காவல் படையினா் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா்.
விழுப்புரம் மாவட்ட கடலோரப் பகுதிகளில் கடந்த சில நாள்களாக கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. பல அடி உயரத்துக்கு ராட்சத அலைகள் எழுவதால், கரையோரம் மண் அரிப்பும் ஏற்படுகிறது.
கடல் சீற்றம் நீடிப்பதால் சுற்றுலாப் பயணிகள், பொதுமக்கள் கடலில் இறங்கி குளிப்பதைத் தடுக்கும் பொருட்டு, காவல் துறை சாா்பில் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
சுற்றுலாப் பயணிகள், பொதுமக்கள் கடலில் இறங்கி குளிப்பதை தடுக்கும் வகையில் போலீஸாா் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனா். ஊா்க்காவல் படையினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.
சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வந்து செல்லும், பொம்மையாா்பாளையம், தந்திராயன்குப்பம் போன்ற கடற்கரைப் பகுதிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கடற்கரையோர கிராமங்களில் பொதுமக்களுக்கும், மீனவா்களுக்கும் போலீஸாா் தகுந்த அறிவுறுத்தல்களை வழங்கி வருகின்றனா்.