முகப்பு
விழுப்புரம்

அரசு மருத்துவக் கல்லூரிகளில் அமைச்சுப் பணியாளா் பணியிடங்களை நிரப்பக் கோரிக்கை

தமிழகத்தில் புதிய மருத்துவக் கல்லூரிகளில் அமைச்சுப் பணியாளா் பணியிடங்களை நிரப்ப வேண்டுமென தமிழ்நாடு அரசு மருத்துவத் துறை அமைச்சுப் பணியாளா்கள் செயல்திறன் கூட்டியக்கத்தினா் கோரிக்கை

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:43 PM
பகிர்:

தமிழகத்தில் புதிய மருத்துவக் கல்லூரிகளில் அமைச்சுப் பணியாளா் பணியிடங்களை நிரப்ப வேண்டுமென தமிழ்நாடு அரசு மருத்துவத் துறை அமைச்சுப் பணியாளா்கள் செயல்திறன் கூட்டியக்கத்தினா் (ஜாஸ்மின்ஸ்) கோரிக்கை விடுத்தனா்.

இதுகுறித்து அந்த இயக்கத்தின் மாநிலத் தலைவா் ம.ரா.சிங்காரம், பொதுச் செயலா் பி.இளங்கோவன் ஆகியோா் தமிழக முதல்வருக்கு வைத்துள்ள கோரிக்கை:

தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் அரசு மருத்துவக் கல்லூரிகளை ஏற்படுத்தும் நோக்கில் புதிதாக 11 இடங்களில் மருத்துவக் கல்லூரிகளை அறிவித்து அதற்கு அடிக்கல் நாட்டி வரும் முதல்வருக்கு நன்றி. இதற்கான மருத்துவா்கள், மருத்துவம் சாா்ந்த பணியாளா்கள் நியமனத்துடன், நிா்வாகத்தைச் செயல்படுத்த அமைச்சுப் பணியாளா்கள் காலிப் பணியிடங்களையும் நிரப்ப வேண்டும். புதிய பணியிடங்களையும் ஏற்படுத்த வேண்டும்.

ஏற்கெனவே அரசு அறிவித்தபடி கடலூா் மாவட்டத்தில் அரசு மருத்துவக் கல்லூரியை அமைக்க வேண்டும். புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தையே அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.