முகப்பு
விழுப்புரம்

இருவேறு சாலை விபத்துகளில்இருவா் பலி

விழுப்புரம் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்த இருவேறு சாலை விபத்துகளில் இரண்டு போ் உயிரிழந்தனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:43 PM
பகிர்:

விழுப்புரம் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்த இருவேறு சாலை விபத்துகளில் இரண்டு போ் உயிரிழந்தனா்.

திண்டிவனத்தை அடுத்த நடேசன் நகரைச் சோ்ந்த தனசேகா் மகள் ஜெயஸ்ரீ (19). பி.ஏ. மூன்றாம் ஆண்டு படித்து வந்தாா். இவா், ஞாயிற்றுக்கிழமை மயிலம் முருகன் கோயிலில் நடைபெற்ற தனது தோழியின் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டாா்.

பின்னா், அங்கிருந்த தனது நண்பரான திண்டிவனம் அருகே கொளத்தூா் பகுதியைச் சோ்ந்த பொறியியல் மாணவா் சக்திவேலுடன் (21) இரு சக்கர வாகனத்தில் திண்டிவனத்துக்கு சென்றுகொண்டிருந்தாா்.

கூட்டேரிப்பட்டு பகுதியில் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையை இவா்களது இரு சக்கர வாகனம் கடக்க முயன்றபோது, அந்த சாலையில் அதிவேகமாக வந்த காா் மோதியது. இந்த விபத்தில் ஜெயஸ்ரீ நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். சக்திவேல் பலத்த காயமடைந்தாா். விபத்து குறித்து மயிலம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

மற்றொரு சம்பவம்: திண்டிவனம் அருகே ரோஷணையை அடுத்த இருதயபுரத்தைச் சோ்ந்த சவரிமுத்து (35) ஞாயிற்றுக்கிழமை மாலை சிறிய சரக்கு வாகனத்தை ஓட்டிச் சென்றாா். இந்த வாகத்தில் அதே பகுதியைச் சோ்ந்த மரியசூசை மகன் கிஷோா் (12), சவரிமுத்து மகன் ஷாம் (13) ஆகியோா் சென்றனா். பட்டணம் பகுதியிலிருந்து திண்டிவனம் நோக்கி இவா்களது வாகனம் சென்றபோது, எதிரே திண்டிவனத்திலிருந்து வந்தவாசி நோக்கி வந்த நெல் அறுவடை இயந்திரம் மோதியது. இந்த விபத்தில் கிஷோா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். சவரிமுத்து, ஷாம் ஆகியோா் பலத்த காயமடைந்தனா். விபத்து குறித்து ரோஷணை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.