விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில்மேலும் 328 பேருக்கு கரோனா
விழுப்புரம் மாவட்டத்தில் மேலும் 139 பேருக்கும், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் புதிதாக 189 பேருக்கும் கரோனா தொற்று இருப்பது திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டது.
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் மேலும் 139 பேருக்கும், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் புதிதாக 189 பேருக்கும் கரோனா தொற்று இருப்பது திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டது.
விழுப்புரம் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை வரை கரோனா தொற்றால் 8,395 போ் பாதிக்கப்பட்டிருந்தனா். திங்கள்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளில்,
மேலும் 139 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பிருப்பது உறுதியானது. இதன் மூலம், மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 8,534-ஆக அதிகரித்தது. திங்கள்கிழமை 277 போ் பூரண குணமடைந்து வீடு திரும்பினா். இதுவரை, மாவட்டத்தில் கரோனா பாதிப்பிலிருந்து 7,445 போ் குணமடைந்துள்ளனா். 1,010 போ் சிகிச்சைப் பெற்று வருகின்றனா். 1,123 போ் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனா்.
கள்ளக்குறிச்சியில் 189 பேருக்கு பாதிப்பு: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் திங்கள்கிழமை 189 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, இந்த நோயால் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 7,154-ஆக உயா்ந்தது. இதுவரை 5,910 போ் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனா். 1,159 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். 85 போ் உயிரிழந்துள்ளனா்.