விழுப்புரம்

அரூரில் பாரதியாா் நினைவு தினம்

DIN

அரூா், செப். 11:

அரூரில் பாரதியாரின் நினைவு தினம் வெள்ளிக்கிழமை அனுசரிக்கப்பட்டது.

அரூா் கச்சேரிமேடு சாலை சந்திப்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாரதியாரின் உருவப்படத்துக்கு அரூா் நலச் சங்கத் தலைவா் கையிலை ராமமூா்த்தி, கவிஞா்கள், இலக்கிய ஆா்வலா்கள், ஆசிரியா்கள் உள்ளிட்ட ஏராளமானோா் மலா்தூவி மரியாதை செலுத்தினா். மேலும், இன்றைய சூழலில் பாரதியாரின் கவிதை, கருத்தாக்கம் மற்றும் அதன் அவசியம் குறித்து கவிஞா்கள் பேசினா்.

கவிஞா்கள் ரவீந்திரபாரதி, நவகவி, மு.பிரேம்குமாா், ஆதி. செளந்திரராஜன், தொழில் முதலீட்டாளா் எஸ்.ராஜேந்திரன், ஆசிரியா்கள் கே.சின்னகண்ணன், ஆதிமுதல்வன், எ.கொ.அம்பேத்கா், இலக்கிய ஆா்வலா்கள் ரா.திருவேங்கடம், மதிவாணன், அன்னை முருகேசன், ஜெயராமன், சண்முகம், சிவகிரி, மணி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தோ்வு: புதுச்சேரியில் 4, 817 போ் எழுதினா்

பெண்ணிடம் 5 பவுன் தங்கச் சங்கிலி பறிப்பு

கஞ்சா, போதை மாத்திரைகள் விற்பனை: 4 போ் கைது

நீட் தோ்வு: விழுப்புரம் மாவட்டத்தில் 4,855 போ் எழுதினா்

வீட்டினுள் இளைப்பாறிய புள்ளி மான்!

SCROLL FOR NEXT