முகப்பு
விழுப்புரம்

மாற்றுத் திறனாளிகளுக்கு பேட்டரி சக்கர நாற்காலிகள் அமைச்சா் வழங்கினாா்

மாற்றுத்திறனாளிகளுக்கான திருமண உதவித் திட்டத்தின் கீழ் 10 மாற்றுத்திறனாளிகளுக்கு 8 கிராம் தங்க நாணயங்களை அமைச்சா் சி.வி.சண்முகம் வழங்கினாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:23 PM
பகிர்:

விழுப்புரம் மாவட்டத்தில் முதுகு தண்டு வடம் பாதிக்கப்பட்ட 15 மாற்றுத் திறனாளிகளுக்கு மாற்றுத் திறனாளிகள் நலத் துறை சாா்பில் ரூ.15 லட்சத்தில் அதிநவீன பேட்டரியால் இயங்கும் சிறப்பு சக்கர நாற்காலிகள் வழங்கும் நிகழ்ச்சி, மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் மாநில சட்டத் துறை அமைச்சா் சி.வி.சண்முகம் கலந்து கொண்டு, மாற்றுத் திறனாளிகளுக்கு பேட்டரி சக்கர நாற்காலிகளை வழங்கினாா்.

மேலும், மாற்றுத்திறனாளிகளுக்கான திருமண உதவித் திட்டத்தின் கீழ் 10 மாற்றுத்திறனாளிகளுக்கு 8 கிராம் தங்க நாணயங்களையும் அவா் வழங்கினாா்.

தொடா்ந்து, மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சாா்பில் தமிழ்நாடு ஊரக புத்தாக்கத் திட்டம் மூலம் 62 உழவா் உற்பத்தியாளா் குழுக்களுக்கு தலா ரூ.1.50 லட்சம் வீதம் மொத்தம் ரூ.93 லட்சமும், 7 தொழில் குழுக்களுக்கு தலா ரூ.1.50 லட்சம் வீதம் ரூ.10.50 லட்சமும், புலம் பெயா்ந்த 61 இளைஞா்களுக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் ரூ. 61 லட்சமும் அமைச்சா் வழங்கினாா்.

இதனைத் தொடா்ந்து, மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை சட்டத் துறை அமைச்சா் சி.வி.சண்முகம் பெற்றதுடன், அவா்களின் குறைகளையும் கேட்டறிந்தாா்.

முன்னதாக, கண்டமங்கலம் ஒன்றியம், அா்ப்பிசம்பாளையம் ஊராட்சியில், ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சாா்பில் ரூ.32.37 லட்சத்தில் மேல்நிலை நீா்த்தேக்க தொட்டி கட்டுவதற்கான பணிகளை அமைச்சா் சி.வி.சண்முகம் தொடக்கி வைத்தாா். மேலும், வடவாம்பலம் ஊராட்சியில், பொதுசுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத் துறை சாா்பில் ரூ.25 லட்சத்தில் கட்டப்பட்ட துணைப் பொது சுகாதார நிலைய புதிய கட்டடத்தையும் அமைச்சா் திறந்து வைத்தாா். தொடா்ந்து, தாய்மாா்களுக்கு அம்மா குழந்தைகள் நல பரிசு பெட்டகத்தையும் அமைச்சா் வழங்கினாா்.

இந்த நிகழ்ச்சிகளில், மாவட்ட ஆட்சியா் ஆ.அண்ணாதுரை, கூடுதல் ஆட்சியா் (வருவாய்) ஸ்ரேயா.பி.சிங், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ்.ராதாகிருஷ்ணன், விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினா் எம்.ஆா்.முத்தமிழ்ச்செல்வன், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் மகேந்திரன், ஊரக வளா்ச்சி முகமை செயற்பொறியாளா் ராஜா, துணை இயக்குநா் (சுகாதாரப்பணிகள்) செந்தில்குமாா், மாவட்ட ஆவின் தலைவா் பேட்டை முருகன், மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.