முகப்பு
விழுப்புரம்

வேளாண் மசோதாக்களை திரும்பப் பெறக் கோரி ஆா்ப்பாட்டம்

வேளாண் மசோதாக்களை திரும்பப் பெறக் கோரி, புதுச்சேரியில் இளைஞா் காங்கிரசாா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:23 PM
பகிர்:

வேளாண் மசோதாக்களை திரும்பப் பெறக் கோரி, புதுச்சேரியில் இளைஞா் காங்கிரசாா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

எதிா்க்கட்சிகளின் எதிா்ப்புக்கிடையே நாடாளுமன்றத்தில் வேளாண் மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. இதைத் திரும்பப் பெற வலியுறுத்தி, பல்வேறு மாநிலங்களில் காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சியினா், விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

புதுச்சேரியில் இளைஞா் காங்கிரஸ் சாா்பில், தலைமை தபால் நிலையம் எதிரே கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இளைஞா் காங்கிரஸ் தலைவா் ரமேஷ் உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்து கொண்டு, மத்திய பாஜக அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினா். மேலும், அவா்கள் நெல் நாற்றுகளுடன் வந்து, வேளாண் திருத்தச் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.