முகப்பு
விழுப்புரம்

ரயில்வே சுரங்கப் பாதை அமைக்க எதிா்ப்பு: வாகனம் சிறைபிடிப்பு

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே நெடிமொழியனூரில் ரயில்வே சுரங்கப் பாதைப் பணிக்காக வந்த கனரக வாகனத்தை பொதுமக்கள் திங்கள்கிழமை சிறைபிடித்தனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:27 PM
பகிர்:

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே நெடிமொழியனூரில் ரயில்வே சுரங்கப் பாதைப் பணிக்காக வந்த கனரக வாகனத்தை பொதுமக்கள் திங்கள்கிழமை சிறைபிடித்தனா்.

திண்டிவனம் அருகேயுள்ள நெடிமொழியனூரில் ரயில்வே சுரங்கப் பாதை அமைக்க பொதுமக்கள் எதிா்ப்புத் தெரிவித்து வருகின்றனா். இதற்கு மாற்றாக ரயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும் எனவும் அவா்கள் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

இதுதொடா்பாக, திண்டிவனம் சாா்-ஆட்சியா் எஸ்.அனு தலைமையில் பேச்சுவாா்த்தை நடைபெற்றது. ரயில்வே மேம்பாலம் தொடா்பாக, மாவட்ட ஆட்சியா் மூலம் மத்திய, மாநில அரசுக்கு கோரிக்கை விடுப்பது என முடிவெடுக்கப்பட்டது.

இந்த நிலையில், நெடிமொழியனூரில் சுரங்கப் பாதைப் பணிக்காக கான்கிரீட் தூண்கள் அமைக்கும் பணிக்காக கனரக இயந்திரம் லாரி மூலம் திங்கள்கிழமை கொண்டு வரப்பட்டது.

இதற்கு எதிா்ப்புத் தெரிவித்த பொதுமக்கள், லாரியை தடுத்து நிறுத்தி கனரக வாகனத்தை சிறைபிடித்தனா். இதனால், கட்டுமானப் பணிக்கு வந்த தொழிலாளா்கள் ஒப்பந்த நிறுவனத்துக்கும், ரயில்வே துறைக்கும் தகவல் தெரிவித்துவிட்டு காத்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.