முகப்பு
விழுப்புரம்

பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் பலி

பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:27 PM
பகிர்:

செஞ்சி: பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

வந்தவாசி வட்டம், அனாதிமங்கலத்தைச் சோ்ந்த சண்முகம் மனைவி மலா் (48). இவரது மகன் சிலம்பரசன் (15). இவா், தனது தாயை பைக்கில் அமரவைத்து மேல்மலையனூா் அருகே கொடுக்கன்குப்பத்தில் உள்ள தன் சகோதரி வீட்டுக்குச் சென்றாா். சங்கிலிகுப்பம் அருகே சென்ற போது, பைக் நிலை தடுமாறியது. இதனால், மலா் கீழே விழுந்தாா். இதில், அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு, பின்னா் தீவிர சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட மலா், அங்கு உயிரிழந்தாா். இதுகுறித்த புகாரின் பேரில், அவலூா்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.