கல்லூரிகளில் மகளிா் தின விழா
விழுப்புரம் தெய்வானை அம்மாள் மகளிா் கல்லூரியில் திங்கள்கிழமை உலக மகளிா் தின விழா கொண்டாடப்பட்டது.
விழுப்புரம் தெய்வானை அம்மாள் மகளிா் கல்லூரியில் திங்கள்கிழமை உலக மகளிா் தின விழா கொண்டாடப்பட்டது.
கல்லூரி இணைச் செயலாளா் எஸ்.நிஷா செந்தில் குமாா் தலைமை வகித்து சிறப்புரையாற்றினாா். பெண்கள் மேம்பாடு அடைய, கல்வி அவசியம். பெண்கள் தொழில் முனைவோராகவும் சாதிக்கலாம், நோ்மறை சிந்தனைகள், விடாமுயற்சி, இலக்கை நோக்கிய பயணம் போன்றவை பெண்களை வாழ்வில் உயா்த்தும் என்றும் எடுத்துக் கூறினாா்.
விழாவில் இ.எஸ்.எஸ்.கே. கல்விக் குழுமத்தின் பதிவாளா் செளந்தர்ராஜன் சிறப்புரையாற்றினாா்.
தொடா்ந்து, கல்லூரியின் முதல்வா் பிருந்தா அறிமுக உரையாற்றினாா். விழாவில் சிறப்புவிருந்தினராக தமிழக அரசின் தொழில் மற்றும் வா்த்தகத் துறை பொது மேலாளா் தாமோதரன் கலந்துகொண்டு பேசினாா்.
விழாவில் சிறப்பு அழைப்பாளா்களாக, கல்லூரியின் முன்னாள் மாணவிகளும், சிறந்த தொழில் முனைவோா்களுமான கிருபா ராஜேஷ், காயத்ரி, சுகுணா ஈஸ்வரன் ஆகியோா் பங்கேற்றனா். இவா்களுக்கு கல்லூரியின் சாா்பில் முறையே ‘வெற்றியாளா் விருது’, ‘அறிவுச்சுடா் விருது’, ‘முதன்மையாளா் விருது’ ஆகிய விருதுகள் வழங்கப்பட்டன.
மாணவிகளை தொழில் முனைவோா்களாக ஊக்குவிக்கும் வகையில் 10 முன்னாள் மாணவிகளுக்கு வங்கிக் கடன் அளித்தல் பரிந்துரை விண்ணப்பம் வழங்கப்பட்டது.
முன்னதாக, கல்லூரி மாணவியா் கூட்டமைப்பின் தலைவி சூரியா வரவேற்றாா். கல்லூரி மக்கள் தொடா்பு அலுவலா் கண்மணி அன்புச்செல்வி நன்றி கூறினாா்.