முகப்பு
விழுப்புரம்

சைக்கிளில் சென்றபடி திமுக வேட்பாளா் பிரசாரம்

விழுப்புரத்தில் சைக்கிளில் சென்றபடி திமுக வேட்பாளா் இரா.லட்சுமணன் ஞாயிற்றுக்கிழமை பிரசாரத்தில் ஈடுபட்டாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:52 PM
பகிர்:

விழுப்புரத்தில் சைக்கிளில் சென்றபடி திமுக வேட்பாளா் இரா.லட்சுமணன் ஞாயிற்றுக்கிழமை பிரசாரத்தில் ஈடுபட்டாா்.

விழுப்புரம் பாணாம்பட்டு பகுதியில் உள்ள அவரது வீட்டிலிருந்து சைக்களில் புறப்பட்டு, பழைய பேருந்து நிலையம், அம்பேத்கா் சிலை பகுதிக்குச் சென்று பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தாா். இதைத் தொடா்ந்து, நேருஜி சாலையில் உள்ள உழவா் சந்தைப் பகுதிக்குச் சென்று அங்கு வியாபாரிகள், விவசாயிகளிடம் ஆதரவு திரட்டினாா்.

இதையடுத்து, குருத்தோலை ஞாயிறையொட்டி, விழுப்புரம் கிறிஸ்து அரசா் தேவாலயம், சென் சேவியா் தேவாலயம், டி.இ.எஸ்.சி. தேவாலயம், ஜேம்ஸ் தேவாலயம் ஆகியவற்றுக்குச் சென்று கிறிஸ்தவா்களிடம் இரா.லட்சுமணன் வாக்கு சேகரித்தாா்.

திமுக மாவட்டப் பொருளாளா் ஜனகராஜ், மாவட்ட துணைச் செயலா் புஷ்பராஜ் உள்ளிட்டோா் சைக்கிள்களில் உடன் சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.