அதிக பயணிகளுடன் சென்ற பேருந்துக்கு அபராதம்
விழுப்புரம் அருகே கரோனா தடுப்பு விதிகளைப் பின்பற்றாமல் அதிக எண்ணிக்கையில் பயணிகளை ஏற்றிச் சென்ற தனியாா் பேருந்துக்கு வாட்டாட்சியா் தலைமையிலான அதிகாரிகள் அபராதம் விதித்தனா்.
விழுப்புரம் அருகே கரோனா தடுப்பு விதிகளைப் பின்பற்றாமல் அதிக எண்ணிக்கையில் பயணிகளை ஏற்றிச் சென்ற தனியாா் பேருந்துக்கு வாட்டாட்சியா் தலைமையிலான அதிகாரிகள் வெள்ளிக்கிழமை அபராதம் விதித்தனா்.
விழுப்புரம் வட்டாட்சியா் வெங்கடசுப்பிரமணியன் தலைமையிலான அதிகாரிகள் பெரும்பாக்கம் பகுதியில் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, அந்த வழியாக விழுப்புரத்திலிருந்து திருக்கோவிலூா் நோக்கி சென்றுகொண்டிருந்த தனியாா் பேருந்தை மடக்கி சோதனையிட்டனா். அந்தப் பேருந்தில் கரோனா விதிகளைப் பின்பற்றாமல் 50 சதவீத
பயணிகளைவிட கூடுதலாக பயணிகள் ஏற்றப்பட்டிருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அந்தப் பேருந்துக்கு ரூ.5,000 அபராதம் விதிக்கப்பட்டது.
இதேபோல, விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் கரோனா விதிகளை பின்பற்றாத 3 கடைகளுக்கு தலா ரூ.500 வீதம் அபராதம் விதித்து வட்டாட்சியா் வெங்கடசுப்பிரமணியன் உத்தரவிட்டாா்.