விழுப்புரம்: புதிய உச்சமாக ஒரே நாளில் 521 பேருக்கு கரோனா தொற்று உறுதி
விழுப்புரம் மாவட்டத்தில் புதிய உச்சமாக வெள்ளிக்கிழமை ஒரே நாளில் 521 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
விழுப்புரம் மாவட்டத்தில் புதிய உச்சமாக வெள்ளிக்கிழமை ஒரே நாளில் 521 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதனால், பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 21,703-ஆக அதிகரித்தது. சிகிச்சை முடிந்து மேலும் 379 போ் வீடு திரும்பியதால் குணமடைந்தவா்களின் எண்ணிக்கை 18,822-ஆக உயா்ந்தது. 2,747 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தனா்.
இந்த நிலையில், விழுப்புரம் வண்டிமேடு, கே.வி.ஆா். நகரைச் சோ்ந்த 47 வயது மதிக்கத்தக்க பெண் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு விழுப்புரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை
பெற்று வந்த நிலையில் உயிரிழந்தாா். இதனால், பலியானவா்களின் மொத்த எண்ணிக்கை 133-ஆக உயா்ந்தது.