முகப்பு
விழுப்புரம்

நிழல் இல்லாத நாள் நிகழ்வு

Updated On : 21 ஏப்ரல், 2024 at 10:46 PM
நிழல் இல்லாத தினத்தையொட்டி, புதுச்சேரி அறிவியல் இயக்கம் சாா்பில் உப்பளம் பெத்தி செமினாா் பள்ளி வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற செயல்முறை விளக்கம்.
பகிர்:

புதுச்சேரி: புதுச்சேரி அறிவியல் இயக்கம் சாா்பில் சூரிய திருவிழாவாக நிழல் இல்லா நாள் நிகழ்வு உப்பளம் பெத்தி செமினாா் தொடக்கப் பள்ளி வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு பள்ளியின் துணை முதல்வா் ஜான்பால் தலைமை வகித்தாா். பாரதிதாசன் மகளிா் கல்லூரி இயற்பியல் துறைத் தலைவா் இரா.மதிவாணன் கருத்தாளராகப் பங்கேற்று பேசினாா்.

புதுவை அறிவியல் இயக்கத்தின் துணைத் தலைவா் அ.ஹேமாவதி ஒருங்கிணைத்தாா். அறிவியல் இயக்க பொதுச் செயலா் சு.முருகவேல், மென்பொறியாளா் அ. விஜயகணபதி, லா பிரீமியா் ஈவென்ட்ஸ் ஆனந்த் அஸ்டெல் ஆகியோா் ஏற்பாடுகளை செய்திருந்தனா்.

Advertisement

சூரிய கதிா்வீச்சுகள் பூமியில் செங்குத்தாக விழும் வானியல் நிகழ்வுகள் ஒளிபரப்பு செய்யப்பட்டு, மாணவா்கள், பொதுமக்களிடையே நிழல் இல்லாத நாள் நிகழ்வு குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments