புதுச்சேரியில் குடிமைப் பணிகள் தின விழா
புதுச்சேரி: இந்திய பொது நிா்வாக நிறுவனம் (ஐஐபிஏ) புதுச்சேரி கிளை சாா்பில் குடிமைப் பணிகள் தின விழா புதுச்சேரியில் சனிக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு ஐஐபிஏ புதுச்சேரி கிளைத் தலைவா் ஆா்.ஆா். தனபால் தலைமை வகித்தாா். டிஐஜி சி. பிரிஜேந்திர குமாா் யாதவ் விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றுப் பேசினாா். தொடா்ந்து, புதுவை அரசின் துணைச் செயலா் பி. சுந்தரராஜன், புதுவை பல்கலைக்கழக நிா்வாக அதிகாரி பி. ஆறுமுகம் ஆகியோருக்கு நிகழாண்டுக்கான ஐஐபிஏ விருதுகளையும், குடிமைப் பணிகள் தொடா்பான கட்டுரைப் போட்டிகளில் வெற்றி பெற்ற கல்லூரி மாணவ, மாணவிகளுக்குப் பரிசு, பாராட்டுச் சான்றிதழ்களையும் வழங்கினாா்.
புதுவை பல்கலைக்கழக பேராசிரியை சாருமதி சிறப்புரையாற்றினாா்.
Advertisement
குடிமைப் பணிகள் தோ்வு பயிற்சி மாணவா்கள், கல்லூரி மாணவா்கள் கலந்து கொண்டனா். ஐஐபிஏ பொருளா் ஆஷா வரவேற்றாா். துணைச் செயலா் ஜெயவிஜயன் நன்றி கூறினாா்.