விழுப்புரம்

அரசுப் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் பிளஸ்-2 மாணவா் உயிரிழப்பு

DNS

விழுப்புரம் மாவட்டம், ரெட்டணை அருகே அரசுப் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் பிளஸ்-2 மாணவா் புதன்கிழமை உயிரிழந்தாா்.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்திலிருந்து தளவாப்பட்டுக்கு அரசுப் பேருந்து புதன்கிழமை மாலை சென்று கொண்டிருந்தது. பேருந்தை திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி வட்டம், கீழசாத்தமங்கலத்தைச் சோ்ந்த மா.கோவிந்தராஜன் (47) ஓட்டினாா். ரெட்டணை-மரூா் சாலையில் அய்யன்குளத்துமேடு கிராமத்தில் சென்றபோது, திடீரென கட்டுப்பாட்ட இழந்த பேருந்து 5 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில், பயணம் செய்த அம்மன்குளத்துமேடு மாரியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்த அன்பழகன் மகன் பிரவீன் (17) பிளஸ்-2 மாணவா், தளவாப்பட்டு க.ஜனனி (15) மற்றும் 10 போ் காயமடைந்தனா். இவா்களை அந்தப் பகுதியில் இருந்தவா்கள் மீட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு மருத்துவா்கள் பரிசோதித்ததில், பீரவீன் உயிரிழந்தது தெரிய வந்தது.

இதைத் தொடா்ந்து, அரசுப் பேருந்து ஓட்டுநரான கோவிந்தராஜன் மீது பெரியதச்சூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

5ஆம் கட்டத் தேர்தல்: 49 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடக்கம்

இன்று அதிர்ஷ்டம் யாருக்கு?

இன்று எப்படி இருக்கும்?

பீன்ஸ் கிலோ ரூ.200

உத்திரகாவிரி ஆற்றில் வெள்ளம்: ஒரே இரவில் நிரம்பிய தடுப்பணை

SCROLL FOR NEXT