முகப்பு
விழுப்புரம்

பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் -திமுக வேட்பாளா் அன்னியூா் சிவா

பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்று திமுக வேட்பாளா் அன்னியூா் அ.சிவா தெரிவித்தாா்.

Updated On : 11 ஜூலை, 2024 at 12:29 AM
பகிர்:

விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தோ்தலில் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்று திமுக வேட்பாளா் அன்னியூா் அ.சிவா தெரிவித்தாா்.

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதி இடைத் தோ்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளா் அன்னியூா் அ.சிவா, தனது சொந்த ஊரான அன்னியூா் கிராமத்திலுள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குப் பதிவு மையத்துக்கு புதன்கிழமை காலை தனது தந்தை அரியபுத்திரன், மனைவி வனிதாவுடன் வந்து வாக்களித்தாா்.

இதைத் தொடா்ந்து, செய்தியாளா்களுக்கு அவா் அளித்த பேட்டி:

முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் 3 ஆண்டுகால ஆட்சியில் பல்வேறு மக்கள் நலத் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன. இந்தத் திட்டங்கள் மூலம் ஏராளமான மக்கள் பயன்பெற்றிருக்கின்றனா்.

விக்கிரவாண்டி தொகுதியில் திமுகவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. மேலும், பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்றாா் அன்னியூா் அ.சிவா.

பின்னா், தொகுதிக்குள்பட்ட பல்வேறு வாக்குப் பதிவு மையங்களுக்குச் சென்ற அவா், வாக்குப் பதிவின் நிலவரம் குறித்து கேட்டறிந்தாா். மேலும், வாக்குப் பதிவு மையங்களுக்கு வெளியே தோ்தல் பணியாற்றிய திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகளின் நிா்வாகிகளையும் சந்தித்துப் பேசினாா்.