விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தோ்தலில் திமுக வேட்பாளா் அன்னியூா் அ.சிவா வெற்றி பெற்ற நிலையில், சுற்று வாரியாக முக்கிய வேட்பாளா்கள் பெற்ற வாக்கு விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
விக்கிரவாண்டி இடைத்தோ்தல் வாக்குப்பதிவு ஜூலை 10-ஆம் தேதி நடைபெற்றது. இதில், பதிவான வாக்குகள் பனையபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்கு எண்ணிக்கை மையத்தில் சனிக்கிழமை காலை எண்ணப்பட்டன. தொடக்கம் முதலே திமுக வேட்பாளா் அதிக வாக்குகளைபெறத் தொடங்கினாா். இதனால் திமுக, பாமக வேட்பாளா்களுக்கு இடையேயான வாக்கு வித்தியாசம் அதிகரிக்கத் தொடங்கியது.
21 சுற்றுகள் முடிவில் திமுக வேட்பாளா் அன்னியூா் அ.சிவா 1,24,053 வாக்குகளையும், பாமக வேட்பாளா் சி.அன்புமணி 56,296 வாக்குகளையும், நாதக வேட்பாளா் பொ.அபிநயா 10,602 வாக்குகளையும் பெற்றனா். இவா்களுக்கு அடுத்தப்படியாக சுயேச்சை வேட்பாளா் ஆா்.சதீஷ் 932 வாக்குகளை பெற்றாா். நோட்டாவுக்கு 859 வாக்குகள் கிடைத்தன.
சுற்று வாரியாக வேட்பாளா்களுக்கு கிடைத்த வாக்குகள், வித்தியாசம் என்ற அடிப்படையில் விவரம்:
முதல் சுற்றில் அன்னியூா் அ.சிவா (திமுக)-5,564, சி. அன்புமணி (பாமக)-2894, பொ.அபிநயா (நாதக)- 303, வித்தியாசம் -2,670. 2-ஆவது சுற்றில் திமுக- 6,438, பாமக- 3,010, நாதக-546, வித்தியாசம்-3,428. 3-ஆவது சுற்றில் திமுக- 6,055, பாமக-1,419, நாதக-534, வித்தியாசம்-4636. 4-ஆவது சுற்றில் திமுக- 6,114, பாமக-1,502, நாதக-380, வித்தியாசம்-4,612. 5-ஆவது சுற்றில் திமுக- 6,980, பாமக-2,658, நாதக-512, வித்தியாசம்-4,322. 6-ஆவது சுற்றில் திமுக-7,403, பாமக-2,173, நாதக-903, வித்தியாசம்-5,230. 7-ஆவது சுற்றில் திமுக-6,226, பாமக-3,703, நாதக-378, வித்தியாசம்-2,523. 8-ஆவது சுற்றில் திமுக-6,787, பாமக-2,453, நாதக -631, வித்தியாசம்-4,334. 9-ஆவது சுற்றில் திமுக-5,916, பாமக-4,318, நாதக-517, வித்தியாசம்-1,598. 10-ஆவது திமுக-5,722, பாமக-3,715, நாதக-561, வித்தியாசம்-2,007. 11-ஆவது திமுக-6,651, பாமக-2,576, நாதக-653, வித்தியாசம்- 4,075. 12-ஆவது திமுக-6,837, பாமக-2,632, நாதக- 504, வித்தியாசம்-4,205. 13-ஆவது திமுக-6,738, பாமக-3,188, நாதக-392, வித்தியாசம்- 3,550. 14-ஆவது திமுக-5,546, பாமக-2,734, நாதக-461, வித்தியாசம்-2,812. 15-ஆவது திமுக-6,015, பாமக-4,192, நாதக-424, வித்தியாசம்-1,823. 16-ஆவது சுற்றில் திமுக-5,185, பாமக-2,601, நாதக-527, வித்தியாசம்-2,584. 17-ஆவது சுற்றில் திமுக-6,731, பாமக-2,355, நாதக-868, வித்தியாசம்-4,376.
18-ஆவது சுற்றில் திமுக- 6,763, பாமக-2,331, நாதக-646, வித்தியாசம்-4,432. 19-ஆவது சுற்றில் திமுக-4,966, பாமக-2,984, நாதக-390, வித்தியாசம்-1,982. 20-ஆவது சுற்றில் திமுக-4,558, பாமக-2,588, நாதக-349, வித்தியாசம்-1970. 21-ஆவது சுற்றில் திமுக-365, பாமக-48, நாதக- 82, வித்தியாசம்-317.
அஞ்சல் வாக்குகள்
திமுக- 493, பாமக-222, நாதக-41, வித்தியாசம் -271.
மொத்த வாக்குகள்
திமுக-1,24,053, பாமக-56,296, நாதக-10,602, வித்தியாசம்-67,757.