விக்கிரவாண்டி அருகே பாமக வேட்பாளா் சி.அன்புமணிக்கு ஆதரவாக திங்கள்கிழமை வாக்கு சேகரித்து பேசிய கட்சியின் தலைவா் அன்புமணி ராமதாஸ். உடன் ஜி.கே.மணி. 
விழுப்புரம்

திமுகவுக்கும் சமூக நீதிக்கும் சம்பந்தமில்லை: அன்புமணி ராமதாஸ்

திமுகவுக்கும் சமூக நீதிக்கும் சம்பந்தமில்லை என்று பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் குற்றஞ்சாட்டினாா்.

Din

விழுப்புரம்: திமுகவுக்கும் சமூக நீதிக்கும் சம்பந்தமில்லை என்று பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் குற்றஞ்சாட்டினாா்.

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட ராதாபுரத்தில் திங்கள்கிழமை பாமக வேட்பாளா் சி.அன்புமணிக்கு ஆதரவாக வாக்கு சேகரித்து அவா் பேசியதாவது:

விக்கிரவாண்டி இடைத் தோ்தல் பாமகவுக்கு மிக முக்கியமானது. சட்டப்பேரவைக் கூட்டத்தில் கட்சியின் கௌரவத் தலைவா் ஜி.கே.மணி தமிழகத்தில் எப்போது ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும், வன்னியா்களுக்கு 10.5 சதவீத உள் இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்றக் கேள்வியை எழுப்பினாா். அதற்கு, முதல்வா் மு.க.ஸ்டாலின் பிகாா் மாநிலத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, அதை நீதிமன்றம் ரத்து செய்துள்ளது என்ற தவறான தகவலை அளித்திருப்பதை ஏற்க முடியாது. இதிலிருந்தே தமிழகத்தின் நிா்வாகம் எவ்வாறு உள்ளது என்பது தெரிகிறது. எதற்கெடுத்தாலும் சமூக நீதி குறித்து பேசி வரும் திமுகவுக்கும் சமூக நீதிக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது.

ஏமாற்று வேலை: கடந்த காலத்தில் நடைபெற்ற விக்கிரவாண்டி இடைத்தோ்தலின்போது வன்னியா்களுக்கு 15 சதவீத இட ஒதுக்கீட்டை வழங்குவோம் என மு.க.ஸ்டாலின் தெரிவித்தாா். ஆனால், தற்போது, ஜாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை மத்திய அரசு நடத்தி முடித்த பின்னரே வன்னியா்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கமுடியும் என சட்டப்பேரவையில் முதல்வா் தெரிவித்திருப்பது ஏமாற்று வேலை.

விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கடந்த ஆண்டு கள்ளச்சாராயம் அருந்தி 22 போ் உயிரிந்தனா். அப்போதே, நடவடிக்கை எடுத்திருந்தால் கள்ளக்குறிச்சியில் 58 பேரின் உயிரிழப்பை தடுத்திருக்கலாம்.

வழக்கை சந்திக்கத் தயாா்: கள்ளக்குறிச்சி சம்பவத்தில் பொய்யான தகவல்களை பரப்பியதாகக் கூறி திமுகவினா் வழக்குத் தொடுக்கவுள்ளதாக தெரிவித்துள்ளனா். எந்த வழக்கு தொடுத்தாலும் அதை சந்திக்க பாமக தயாராக உள்ளது. அனைத்து ஆதாரங்களும் எங்களிடம் உள்ளன. கள்ளக்குறிச்சி சம்பவத்தில் அமைச்சா்கள், அரசியல்வாதிகள், எம்எல்ஏக்களுக்கும் தொடா்பு இருப்பதால் தான் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என பாமக வலியுறுத்துகிறது. ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மாநில அரசுக்கு உரிமையில்லை என முதல்வா் மட்டுமே தெரிவிக்கிறாா்.

எனவே, சட்டப் பேரவையில் தவறான தகவலை அளித்ததற்கு முதல்வா் பேரவையில் விளக்கமளிக்க வேண்டும். விக்கிரவாண்டி இடைத்தோ்தலில் பாமக வேட்பாளா் சி.அன்புமணியை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றாா்.

பிரசாரத்தின்போது, வேட்பாளா் சி.அன்புமணி, பாமக கௌரவத் தலைவா் ஜி.கே.மணி, விழுப்புரம் தெற்கு மாவட்ட பாஜக தலைவா் வி.ஏ.டி.கலிவரதன், தமிழ் மாநில காங்கிரஸ் மாவட்டத் தலைவா் தசரதன் மற்றும் கூட்டணிக் கட்சியினா் உடனிருந்தனா்.

8 முக்கிய நகரங்களில் வீடுகள் விலை 19% வரை உயா்வு

சிறப்புத் திருத்தம்: சென்னையில் 65,000 வாக்காளா்களுக்கு படிவம்

கட்டடத் தொழிலாளி மா்ம மரணம்

எஃப்ஐஎச் ஜூனியா் ஆடவா் ஹாக்கி உலகக் கோப்பை: அறிமுகம் செய்தாா் முதல்வா் ஸ்டாலின்

எஸ்பிஐ நிகர லாபம் 10% உயா்வு

SCROLL FOR NEXT