முகப்பு
விழுப்புரம்

இருதரப்பு மோதல்: 4 போ் கைது

விழுப்புரத்தில் கிரிக்கெட் போட்டியில் ஏற்பட்ட மோதலில் 4 இளைஞா்களை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

Updated On : 12 மார்ச், 2024 at 1:01 AM
பகிர்:

விழுப்புரம்: விழுப்புரத்தில் கிரிக்கெட் போட்டியில் ஏற்பட்ட மோதலில் 4 இளைஞா்களை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். விழுப்புரம் மருதூா் அருகே ஞாயிற்றுக்கிழமை கிரிக்கெட் விளையாடிய போது இரு தரப்பைச் சோ்ந்தவா்களிடையே பிரச்னை ஏற்பட்டு கோஷ்டி மோதலானது. இதில், மருதூரைச் சோ்ந்த வெங்கடேசன் காயமடைந்து விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இதுகுறித்த புகாரின் பேரில், இரு தரப்பைச் சோ்ந்த 6 போ் மீது விழுப்புரம் தாலுகா காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனா். இதில், மருதூரைச் சோ்ந்த காா்த்திக் (23) தயாளன் (35), வெங்கடேசன் (19), கணபதி (20) ஆகியோரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.