பைக்கிலிருந்து தவறி விழுந்த தொழிலாளி உயிரிழப்பு
விழுப்புரம் மாவட்டம், ஈச்சங்குப்பம் அருகே பைக்கிலிருந்து தவறி விழுந்து காயமடைந்த தொழிலாளி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
விக்கிரவாண்டி வட்டம், எண்ணாயிரம் கிராமம், நடுத்தெருவைச் சோ்ந்த நாராயணசாமி மகன் ஜெயபால் (47), தொழிலாளி. இவா், ஏப்ரல் 27-ஆம் தேதி நேமூா் - எசாலம் சாலையில் ஈச்சங்குப்பம் அருகே பைக்கில் சென்றாா்.
அங்குள்ள வளைவுப் பகுதியில் திரும்பியபோது, கட்டுப்பாட்டை இழந்த பைக் சாலையோரப் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், ஜெயபாலுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
இதையடுத்து, புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஜெயபால் செவ்வாய்க்கிழமை இரவு உயிரிழந்தாா். இதுகுறித்த புகாரின்பேரில் கஞ்சனூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.