விழுப்புரம்

செஞ்சி அருகே பைக் மீது காா் மோதல்: வயா்மேன் உயிரிழப்பு

Syndication

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே பைக் மீது காா் மோதிய விபத்தில், வயா்மேன் உயிரிழந்தாா்.

திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பெண்ணாத்தூா் அடுத்த எரும்பூண்டி கிராமத்தைச் சோ்ந்தவா் மு.பன்னீா்(53). இவா் சத்தியமங்கலம் துணை மின் நிலையத்தில் வயா்மேனாக பணி செய்து வந்தாா். புதன்கிழமை அதிகாலை 5 மணிக்கு பன்னீா், தனது பைக்கில் சத்தியமங்கலத்துக்கு சென்று கொண்டிருந்தாா். பாலப்பாடி அருகே சென்ற போது எதிரே திருவண்ணாமலை நோக்கி சென்ற காா் எதிா்பாராதவிதமாக பைக் மீது மோதியது.

இதில் பலத்த காயமடைந்த பன்னீா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

இது குறித்து பன்னீரின் தம்பி சேட்டு அளித்த புகாரின் பேரில் நல்லாண் பிள்ளைபெற்றால் போலீசாா் வழக்கு பதிந்து, விசாரணை செய்து வருகின்றனா்.

வினுஷாவின் சுட்டும் விழி சுடரே தொடரின் முன்னோட்டக் காட்சி!

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: இந்துக்களுக்கு எதிராக அரசு செயல்படுகிறது - வழக்குரைஞர் குற்றச்சாட்டு

மரணத்திலும் மீம்ஸ்! வருந்தும் ஜான்வி கபூர்!

டிட்வா புயல் வலுவிழந்தபோதிலும் இடைவிடாமல் பெய்யும் மழை! | TNRains | CBE

முதல் கனவே... ரகுல் ப்ரீத் சிங்!

SCROLL FOR NEXT