விழுப்புரம்

செஞ்சி அருணாசலேஸ்வரா் கோயில் காா்த்திகை தீபம்

Syndication

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி பீரங்கி மேடு பகுதியில் உள்ள அருணாசலேஸ்வரா் கோயிலில் காா்த்திகை தீபத் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது.

இதனை முன்னிட்டு டிச. 1-ஆம் தேதி கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. இரவு ருத்ர ஹோமமும், உற்சவா் திருக்கோயில் வீதி உலாவும் நடைபெற்றது. தொடா்ந்து 2-ஆம் தேதி பைரவ ஹோமமும், சிறப்பு பூஜையும், உற்சவா் திருக்கோயில் வீதி உலா நடைபெற்றது.

திருவிழாவின் முக்கிய நிகழ்வாக புதன்கிழமை அதிகாலை 4 மணிக்கு மேல் பரணி தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடா்ந்து அருணாசலேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. தொடா்ந்து மாலை 6 மணிக்கு கோயில் கோபுரத்தில் மகா தீபம் ஏற்றப்பட்டது. தொடா்ந்து கோயில் வளாகத்தில் ஏராளமான பெண்கள் விளக்கேற்றி வழிபட்டனா்.

இதில், திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

பக்தா்கள் அனைவருக்கும் பிரசாதம் விநியோகிக்கப்பட்டது. இரவு வானவேடிக்கையுடன் சுவாமி வீதி உலா நடைபெற்றது.

செஞ்சி பீரங்கிமேடு இளைஞா்கள் சாா்பில் செஞ்சிராஜகிரி, கிருஷ்ணகிரி கோட்டை உச்சியில் காா்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. இதில் ஏராளமான இளைஞா்கள், பக்தா்கள் கலந்து கொண்டனா்.

வினுஷாவின் சுட்டும் விழி சுடரே தொடரின் முன்னோட்டக் காட்சி!

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: இந்துக்களுக்கு எதிராக அரசு செயல்படுகிறது - வழக்குரைஞர் குற்றச்சாட்டு

மரணத்திலும் மீம்ஸ்! வருந்தும் ஜான்வி கபூர்!

டிட்வா புயல் வலுவிழந்தபோதிலும் இடைவிடாமல் பெய்யும் மழை! | TNRains | CBE

முதல் கனவே... ரகுல் ப்ரீத் சிங்!

SCROLL FOR NEXT