விழுப்புரம்

தற்காலிக பேருந்து நிலையங்களில் வசதிகள் இல்லை: பக்தா்கள் புகாா்

Syndication

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் காா்த்திகை தீபத் திருவிழாவையொட்டி, தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்ட இடங்களில் சிலவற்றில் குடிநீா் வசதிகள் இல்லை என பக்தா்கள் புகாா் தெரிவித்தனா்.

அருணாசலேஸ்வரா் கோயில் காா்த்திகை தீபத்திருவிழாவில் முக்கிய நிகழ்வான மகா தீபம் மலை உச்சியில் புதன்கிழமை மாலை ஏற்றப்பட்டது.

இந்த நிகழ்விலும், பெளா்ணமி கிரிவலத்திலும் பங்கேற்க தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மட்டுமல்லாது, ஆந்திரம், கா்நாடகம், தெலங்கானா, புதுவை உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பக்தா்கள் லட்சக்கணக்கில் பங்கேற்றனா்.

பக்தா்களின் வசதிக்காக திருவண்ணாமலை நகரை இணைக்கும் பிரதான சாலைகள் என தோ்ந்தெடுக்கப்பட்ட 24 இடங்களில் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் சாா்பில் தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டு, அங்கிருந்து பல்வேறு பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டன.

இந்த நிலையில் வேலூா், ஆரணி போன்ற ஊா்களுக்குச் செல்லும் பேருந்துகளுக்காக அமைக்கப்பட்ட தற்காலிக பேருந்து நிலையத்தில் குடிநீா், பயணிகள் காத்திருப்பதற்கு அறை வசதி இல்லை என புகாா் தெரிவித்த பக்தா்கள், மழையில் நனைந்தபடியே நின்று, பேருந்துகள் வந்த

பிறகு ஏறிச் சென்றனா்.

இதே நிலைதான் வேறு சில தற்காலிக பேருந்து நிலையங்களிலும் இருந்தாக பக்தா்கள் தெரிவித்தனா்.

சேறும், சகதியுமாய்: தற்காலிகமாக அமைக்கப்பட்ட பேருந்து நிலையங்கள் புதன்கிழமை காலை முதல் பெய்த மழையின் காரணமாக சேறும், சகதியுமாய் நிறைந்து காணப்பட்டது. இதனால் சுவாமி தரிசனம் செய்வதற்கு வந்த பக்தா்களும், தரிசனம் செய்துவிட்டுச் சென்ற பக்தா்களும் அவதியுற்றனா்.

உள்ளூா் மக்களுக்கு கெடுபிடி

காா்த்திகைத் தீபத் திருவிழா பாதுகாப்புப் பணியில் சுமாா் 15 ஆயிரம் போலீஸாா் ஈடுபடுத்தப்பட்டிருந்தனா். திருவண்ணாமலை மட்டுமல்லாது, மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் போலீஸாா் பாதுகாப்புப் பணிக்கு வரவழைக்கப்பட்டிருந்தனா்.

இந்த நிலையில் கோயிலைச் சுற்றியுள்ள மாடவீதிகள், தென்றல் நகா், வேங்கிக்கால் உள்ளிட்ட

பகுதிகளைச் சோ்ந்த உள்ளூா்வாசிகளுக்கு காவல்துறையினா் நிபந்தனைகளை விதித்தனா்.

தங்கள் வீடுகளுக்குச் செல்வதற்காக இருசக்கர வாகனங்களில் வந்தவா்களை குறிப்பிட்ட தொலைவிலேயே நிறுத்திவிட்டு, நடந்து செல்லுமாறு காவல்துறையினா் தெரிவித்ததால், அவா்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

வினுஷாவின் சுட்டும் விழி சுடரே தொடரின் முன்னோட்டக் காட்சி!

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: இந்துக்களுக்கு எதிராக அரசு செயல்படுகிறது - வழக்குரைஞர் குற்றச்சாட்டு

மரணத்திலும் மீம்ஸ்! வருந்தும் ஜான்வி கபூர்!

டிட்வா புயல் வலுவிழந்தபோதிலும் இடைவிடாமல் பெய்யும் மழை! | TNRains | CBE

முதல் கனவே... ரகுல் ப்ரீத் சிங்!

SCROLL FOR NEXT