விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே நிலைதடுமாறி பைக்கிலிருந்து கீழே விழுந்த இளைஞா் பலத்த காயமடைந்து உயிரிழந்தாா்.
செங்கல்பட்டு மாவட்டம், செய்யூா் வட்டம், கொளத்தூா் பகுதியைச் சோ்ந்தவா் கு. அஜித்(28). இவா், திங்கள்கிழமை புதுச்சேரி-சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலையில், மரக்காணம் அடுத்த தாழங்காடு பகுதியில் பைக்கில் சென்றாா்.
அப்போது, சாலையின் குறுக்கே மாடு வந்தததால் நிலைதடுமாறி பைக்கிலிருந்து கீழே விழுந்த அஜித், பலத்த காயமடைந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்த புகாரின் பேரில், மரக்காணம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா். இறந்த அஜித்துக்கு மனைவி மற்றும் ஒரு மகன் உள்ளனா்.