விழுப்புரம்

பொறியியல் பணிகளால் ரயில் போக்குவரத்தில் மாற்றம்

தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்டத்துக்குள்பட்ட பகுதியில் பொறியியல் பணிகள் நடைபெறுவதால், ரயில் போக்குவரத்தில் மாற்றம்

Syndication

தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்டத்துக்குள்பட்ட பகுதியில் பொறியியல் பணிகள் நடைபெறுவதால், ரயில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்ட மக்கள் தொடா்பு அலுவலா் ஆா்.வினோத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருச்சி கோட்டத்துக்குள்பட்ட குளிக்கரை ரயில் நிலையத்தில் பொறியியல் பணிகள் மேற்கொள்ளப்படுவதால் பகுதியளவில் ரத்து, புறப்படும் நேரம் மாற்றம் போன்றவை அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை தாம்பரத்திலிருந்து காலை 9.45 மணிக்குப் புறப்படும் தாம்பரம்- விழுப்புரம் பயணிகள் ரயில் (வண்டிஎண் 66045), டிச.16 முதல் 19-ஆம் தேதி வரை முண்டியம்பாக்கம்-விழுப்புரம் இடையே பகுதியளவில் ரத்துசெய்யப்பட்டுள்ளது. இதனால் இந்த ரயில் முண்டியம்பாக்கம் ரயில் நிலையத்துடன் நிறுத்தப்படும்.

விழுப்புரம் ரயில் நிலையத்திலிருந்து பிற்பகல் 1.40 மணிக்குப் புறப்பட வேண்டிய விழுப்புரம்-சென்னை கடற்கரைப் பயணிகள் ரயில் (வண்டி எண் 66046), டிச.16 முதல் 19-ஆம் தேதி வரை விழுப்புரம்- முண்டியம்பாக்கம் இடையே பகுதியளவில் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்த ரயில் முண்டியம்பாக்கம் ரயில் நிலையத்திலிருந்து பிற்பகல் 1.55 மணிக்குப் புறப்படும்.

விழுப்புரத்திலிருந்து பிற்பகல் 2.35 மணிக்குப் புறப்படும் விழுப்புரம்- மயிலாடுதுறை பயணிகள் ரயில் (வண்டி எண் 66019), டிச.15-ஆம் தேதி சுமாா் 20 நிமிஷங்கள் தாமதமாக பிற்பகல் 2.55 மணிக்குப் புறப்படும் என்று அவா் தெரிவித்துள்ளாா்.

அதிமுக பொதுக்குழு தொடங்கியது! தற்காலிக அவைத் தலைவர் கே.பி. முனுசாமி!

சென்னையில் 2-வது நாளாக நகை வியாபாரிகள் வீடுகள், அலுவலங்கள், கடைகளில் அமலாக்கத்துறை சோதனை

வெளிநாட்டு நாயகன்! ஜெர்மனி செல்லும் ராகுலை விமர்சித்த பாஜக!

பாமக பிரமுகர் ராமலிங்கம் கொலை வழக்கில் என்ஐஏ தேடிவந்த முக்கிய குற்றவாளிகள் 2 பேர் கைது

நயினார் நாகேந்திரனை டெபாசிட் இழக்கச் செய்வோம்! செங்கோட்டையன் சூளுரை!

SCROLL FOR NEXT