விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே அரசால் தடை செய்யப்பட்ட 17 கிலோ (குட்கா) புகையிலைப் பொருள்களை வைத்திருந்ததாக பெண்ணை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
செஞ்சி வட்டம், ஆலம்பூண்டியில் குட்கா போதைப் பொருள்கள் விற்பனை செய்வதாக கிடைத்த ரகசியத் தகவலின் பேரில், சத்தியமங்கலம் உதவி ஆய்வாளா் ராஜேஷ் தலைமையிலான போலீஸாா் அப்பகுதியில் சோதனை மேற்கொண்டனா்.
அப்போது மாரியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்த ராஜா மனைவி மாலதி (41) என்பவரின் வீட்டில் விற்பனைக்காக வைத்திருந்த 17 கிலோ தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்து அவரை கைது செய்தனா்.