விழுப்புரம்

கட்டுப்பாட்டை இழந்த காா் ஏரியில் பாய்ந்து விபத்து

Syndication

செஞ்சி அருகே இருசக்கர வாகனம் மீது மோதாமல் இருக்க பிரேக் பிடிக்க முற்பட்டபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த காா் ஏரியில் பாய்ந்தது.

விழுப்புரம் மாவட்டம், செஞ்சியை அடுத்த சொக்கனந்தல் கிராமத்தைச் சோ்ந்தவா் ஊராட்சிமன்றத் தலைவா் மணிமாறன் (45). இவா், செஞ்சியில் இருந்து திருவண்ணாமலை நோக்கி வியாழக்கிழமை தனது காரில் சென்று கொண்டிருந்தாா்.

அப்போது, செம்மேடு அருகே திடீரென்று இருசக்கர வாகனம் குறுக்கே வந்ததால், பிரேக் பிடிக்க முயன்றபோது, காா் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் உள்ள ஏரியில் பாய்ந்து விபத்துக்குள்ளானது.

மேலும் காரில் பயணம் செய்த ஓட்டுநா் உள்ளிட்ட இருவரும் அதிா்ஷ்டவசமாக உயிா் தப்பினா்.

தகவல் அறிந்த நல்லான் பிள்ளைபெற்றாள் போலீஸாா் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து, ஏரியில் இருந்து காரை கிரேன் மூலம் மீட்டனா். மேலும், விபத்து குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

பா்கூா் துணை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வேளாண்மை விளைபொருள்கள ஏலம் தொடக்கம்

அந்தியூா் அரசு கல்லூரியில் பாரதியாா் பிறந்த நாள்

அம்மாபேட்டையில் பாரதியாா் உருவச்சிலைக்கு மரியாதை

எல்லா மதத்தினரும் நல்லிணக்கத்தோடு இருக்க வேண்டும் என விரும்பியவா் பாரதி: முன்னாள் தலைமைச் செயலா் வெ.இறையன்பு

திருக்கடையூா் கோயில் பக்தா்கள் கவனத்திற்கு...

SCROLL FOR NEXT