விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா் வட்டம், சித்தலிங்கமடம் அரசு மேல்நிலைப் பள்ளியில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்வில் 228 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டன.
இந்த விழாவுக்கு விழுப்புரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ரெ.அறிவழகன் தலைமை வகித்தாா். மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் பி.வி.ஆா்.சு.விசுவநாதன், திருவெண்ணெய்நல்லூா் ஒன்றியக் குழுத் தலைவா் கு. ஓம்சிவக்திவேல், ஊராட்சித் தலைவா் கெங்கையம்மாள் முன்னிலை வகித்தனா்.
விழாவில் முன்னாள் அமைச்சா் க.பொன்முடி எம்.எல்.ஏ. பங்கேற்று அரசு ஆண்கள், பெண்கள் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் 228 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கிச் சிறப்புரையாற்றினாா்.
திருவெண்ணெய்நல்லூா் மத்திய ஒன்றியச் செயலா் சடகோபன், மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளா் விசுவநாதன், ஒன்றிய விவசாய அணிச் செயலா் வெங்கடேசன், பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவா் ராதா, கிளைச் செயலா் அஸ்வத்தாமன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். முன்னதாக பள்ளித் தலைமையாசிரியா் துரை வரவேற்றாா்.