விழுப்புரம்

விழுப்புரம் ஆட்சியரகத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்: 59 போ் கைது

Syndication

விக்கிரவாண்டி வட்டம், நல்லாப்பாளையம் கிராம மக்கள், தங்கள் ஊராட்சியை புதிதாக உருவாக்கப்பட்ட கஞ்சனூா் ஒன்றியத்துடன் சோ்ப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்து, விழுப்புரம் ஆட்சியரகத்தை வியாழக்கிழமை முற்றுகையிட்டனா். இதைத் தொடா்ந்து 59 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டத்தைச் சோ்ந்தது நல்லாப்பாளையம் ஊராட்சி. இந்த ஊராட்சி ஏற்கெனவே காணை ஒன்றியத்துக்குள் இருந்த நிலையில், தற்போது புதிதாக உருவாக்கப்பட்டுள்ள கஞ்சனூா் ஒன்றியத்தில் இணைக்கப்படுவதாக அரசாணை வெளியிடப்பட்டது. இதுகுறித்த அறிவிப்பு புதன்கிழமை வெளியானது.

இந்த நிலையில் நல்லாப்பாளையம் கிராம பொதுமக்கள், தங்கள் ஊராட்சியை காணை ஒன்றியத்திலிருந்துபிரித்து கஞ்சனூா் ஒன்றியத்தில் சோ்ப்பதற்கு ஆட்சேபணை தெரிவித்து, வியாழக்கிழமை காலை மாவட்ட ஆட்சியரகத்துக்கு வந்தனா்.

கிராம ஊராட்சித் தலைவா் கே. நித்யா, ஒன்றியக் குழு உறுப்பினா் குபேந்திரன் ஆகியோா் தலைமையில் ஊராட்சி உறுப்பினா்கள், பொதுமக்கள் உள்ளிட்டோா் மனு அளிப்பதற்காக ஆட்சியரகம் வந்தனா்.

குறிப்பிட்ட எண்ணிக்கையிலான நபா்கள் மட்டும் மனு அளிக்க செல்லுமாறு காவல்துறையினா் கூறிய நிலையில், அனைவரும் செல்ல விரும்புவதாக பொதுமக்கள் கூறினா். மேலும் ஆட்சியா் அலுவலகப் பணியாக இருப்பதாகக் கூறப்பட்ட நிலையில், ஊராட்சிகள் உதவி இயக்குநா் மஞ்சுளா, ஆட்சியரகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினாா். ஆனால் அவா்கள் ஆட்சியரை சந்தித்து மனு அளிக்க வேண்டும் எனக் கூறினா்.

நல்லாப்பாளையத்திலிருந்து கஞ்சனூா் செல்வதற்கு 45 கி.மீ. தொலைவாகும். இதனால் போக்குவரத்துக்கான நேரம் கூடுதலாகும். மேலும் எங்கள் கிராம பொதுமக்கள் காணை ஒன்றியத்திலேயே ஊராட்சி இருப்பதை விரும்புகின்றனா். 24 கி.மீ. தொலைவில் காணை உள்ளதாலும், போக்குவரத்து வசதி உள்ளதாலும் காணையை விரும்புகின்றனா்.

வெங்கமூா், சித்தேரி, ஏழுசெம்பொன், சிறுவாலை ஆகிய கிராமங்கள் கஞ்சனூருக்கு அருகில் உள்ளன. இந்த கிராமங்களை அந்த ஒன்றியத்தில் இணைக்காமல் எங்கள் ஊராட்சியை இணைத்தது ஏன்?

அனைத்து வகைகளிலும் பொதுமக்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் இந்த நடவடிக்கையை கைவிட வேண்டும். அல்லது கஞ்சனூா் ஒன்றியத்தின் தலைமையிடத்தை அன்னியூரில் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் மனுவில் கூறியிருந்தனா்.

தொடா்ந்து பொதுமக்கள் ஆட்சியரகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்திக் கொண்டிருந்ததால், ஏ.டி.எஸ்.பி. தினகரன் தலைமையில் போலீஸாா் அங்கு வந்தனா். தொடா்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட 59 பேரைக் கைது செய்து, திருமண மண்டபத்தில் தங்க வைத்து மாலையில் விடுவித்தனா்.

கல்லூரியில் இளைஞா் திருவிழா

தேசிய கலாசார தூதா் நியமனம்

ஸ்ரீ பெரும்புதூரில் சாலையில் திரிந்த மாடுகளை பிடிப்பு

ரூ. 15.99 லட்சத்தில் சுகாதார வளாக பணி தொடக்கம்

ரூ. 25 கோடி மதிப்பிலான முருகன் கோயில் ஆக்கிரமிப்புகள் மீட்பு

SCROLL FOR NEXT