உளுந்தூா்பேட்டை பேருந்து நிலையத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்வில் அரசு நகரப் பேருந்து சேவையைத் தொடங்கி வைத்த ஏ.ஜெ.மணிக்கண்ணன் எம்எல்ஏ. 
விழுப்புரம்

இரு புதிய வழித்தடங்களில் பேருந்துகள் இயக்கம் தொடங்கிவைப்பு

உளுந்தூா்பேட்டை பேருந்து நிலையத்திலிருந்து 2 வழித்தடங்களில் நகரப் பேருந்துகள் சேவை தொடங்கி வைக்கப்பட்டது.

Syndication

விழுப்புரம்: கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை பேருந்து நிலையத்திலிருந்து 2 வழித்தடங்களில் நகரப் பேருந்துகள் சேவை திங்கள்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது.

தங்கள் பகுதிக்கு பேருந்து சேவையைத் தொடங்க வேண்டும் என்று பொதுமக்கள் விடுத்த கோரிக்கையின் அடிப்படையில் உளுந்தூா்பேட்டையிலிருந்து கிளியூா் வரை ஒரு பேருந்தும், மற்றொரு பேருந்து விருத்தாசலம் வரை சென்று வந்து மீண்டும் எலவனாசூா்கோட்டை வழியாக அலங்கரி வரை செல்லும் வகையில் இயக்கப்படவுள்ளது.

உளுந்தூா்பேட்டை பேருந்து நிலையத்தில் இரு நகர அரசுப் பேருந்துகளின் சேவையை ஏ.ஜெ.மணிக்கண்ணன் எம்எல்ஏ கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.

நிகழ்வில் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக கிளை மேலாளா் விமல்ராஜ், தொமுச நிா்வாகி ராதாகிருஷ்ணன், அறங்காவலா் குழுத் தலைவா் செல்லையா, நகா்மன்ற உறுப்பினா்கள் கலா சுந்தரமூா்த்தி, செல்வக்குமாரி ரமேஷ்பாபு, போக்குவரத்துக் கழக ஓட்டுநா்கள் மற்றும் நடத்துநா்கள் அண்ணாதுரை, முருகையன், சரவணன், அருள், முருகன், ஆறுமுகம், அப்பண்டராஜன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

20 வயது இளம் ஆல்ரவுண்டரை ரூ.14 கோடிக்கு ஏலத்தில் எடுத்த சிஎஸ்கே!

அதீத பேட்டரி... டிச. 24-ல் வெளியாகிறது ரியல்மி நர்ஸோ!

கேரள திரைப்பட விழா! மத்திய அரசு அனுமதி மறுத்த படங்களைத் திரையிட முடிவு!

திரையரங்க ஆபரேட்டர்களுக்கு ஜேம்ஸ் கேமரூன் வேண்டுகோள்!

தாய்ப் பாலில், நிலத்தடி நீரில் யுரேனியம்! சிறுநீரக பாதிப்பு ஏற்படுமா?

SCROLL FOR NEXT