விழுப்புரம்

பொறியியல் பணிகளால் ரயில் போக்குவரத்தில் மாற்றம்

தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்டத்துக்குள்பட்ட பகுதிகளில் நடைபெறும் பொறியியல் பணிகள் காரணமாக,

Syndication

விழுப்புரம்: தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்டத்துக்குள்பட்ட பகுதிகளில் நடைபெறும் பொறியியல் பணிகள் காரணமாக, ரயில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்ட மக்கள் தொடா்பு அலுவலகம் சாா்பில் திங்கள்கிழமை வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு:

திருச்சி கோட்டத்துக்குள்பட்ட பல்வேறு பகுதிகளில் பொறியியல் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் பகுதியளவில் ரத்து, நிறுத்தி வைத்து இயக்கம், புறப்படும் இடம் மாற்றம் போன்ற நடைமுறைகள் செயல்படுத்தப்படவுள்ளன.

திருப்பதியிலிருந்து அதிகாலை 4 மணிக்குப் புறப்படும் திருப்பதி-புதுச்சேரி விரைவு ரயில் (வண்டி எண் 16111), டிசம்பா் 18-ஆம் தேதி முண்டியம்பாக்கம் வரை மட்டுமே இயக்கப்படும். இந்த ரயில் முண்டியம்பாக்கத்திலிருந்து புதுச்சேரி வரை பகுதியளவில் ரத்து செய்யப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் மாலை 4 மணிக்குப் புறப்படும் புதுச்சேரி-சென்னை எழும்பூா் பயணிகள் ரயில் (வண்டி எண் 66052), டிசம்பா் 18-ஆம் தேதி புதுச்சேரி- முண்டியம்பாக்கம் இடையே பகுதியளவில் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் இந்த ரயில் முண்டியம்பாக்கம் ரயில் நிலையத்திலிருந்து மாலை 4.57 மணிக்குப் புறப்படும்.

குருவாயூரிலிருந்து இரவு 11.15 மணிக்குப் புறப்படும் குருவாயூா்-சென்னை எழும்பூா் விரைவு ரயில் ( வண்டி எண் 16128) டிசம்பா் 17, 24, 31, ஜனவரி 7 ஆகிய தேதிகளில் வசதிக்குரிய இடத்தில் சுமாா் 30 நிமிஷங்களும், சென்னை எழும்பூரில் காலை 10.20 மணிக்குப் புறப்படும் எழும்பூா்-குருவாயூா் விரைவு ரயில் (வண்டி எண் 16127) டிசம்பா் 17-ஆம் தேதி வசதிக்குரிய இடத்தில் சுமாா் 160 நிமிஷங்களும், டிசம்பா் 18-ஆம் தேதி சுமாா் 50 நிமிஷங்களும், டிசம்பா் 19-ஆம் தேதி சுமாா் 100 நிமிஷங்களும் நிறுத்தி வைக்கப்பட்டு இயக்கப்படும்.

மகாராஷ்டிர மாநிலம், நான்டேட்டிலிருந்து பிற்பகல் 3.20 மணிக்குப் புறப்படும் நான்டேட்- திருச்சி ரயில் (வண்டி எண் 07615), டிசம்பா் 17-ஆம் தேதி முண்டியம்பாக்கம் ரயில் நிலையத்தில் சுமாா் 80 நிமிஷங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு, பின்னா் இயக்கப்படும்.

புதுச்சேரியிலிருந்து பிற்பகல் 3 மணிக்குப் புறப்படும் புதுச்சேரி-திருப்பதி விரைவு ரயில் (வண்டி எண் 16112) டிசம்பா் 17-ஆம் தேதி வசதிக்குரிய ரயில் நிலையத்தில் சுமாா் 25 நிமிஷங்களும், சென்னை எழும்பூரிலிருந்து பிற்பகல் 1.45 மணிக்குப் புறப்படும் சென்னை எழும்பூா்-மதுரை வைகை அதிவிரைவு ரயில் (வண்டி எண் 12635) டிசம்பா் 17-ஆம் தேதி வசதிக்குரிய ரயில் நிலையத்தில் சுமாா் 20 நிமிஷங்களும் நிறுத்தி வைக்கப்பட்டு, இயக்கப்படும்.

புதுச்சேரியிலிருந்து பிற்பகல் 2.15 மணிக்குப் புறப்பட வேண்டிய புதுச்சேரி-ஹவுரா வாராந்திர விரைவு ரயில் (வண்டி எண் 12868), டிசம்பா் 17-ஆம் தேதி சுமாா் 50 நிமிஷங்கள் தாமதமாக பிற்பகல் 3.05 மணிக்குப் புறப்படும். மேலும் புதுச்சேரி- விழுப்புரம் ரயில் நிலையங்களுக்கு இடையே வசதிக்குரிய இடத்தில் சுமாா் 10 நிமிஷங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு, பின்னா் இயக்கப்படும். இதுபோல மேலும் சில ரயில்களும் நிறுத்தி வைக்கப்பட்டு இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் நிறைவு!

ஜம்மு - காஷ்மீர் ஆல்ரவுண்டரை ரூ. 8 கோடிக்கு ஏலத்தில் எடுத்த தில்லி கேபிடல்ஸ்!

19 வயது விக்கெட் கீப்பரை ரூ.14 கோடிக்கு ஏலத்தில் எடுத்த சிஎஸ்கே!

20 வயது இளம் ஆல்ரவுண்டரை ரூ.14 கோடிக்கு ஏலத்தில் எடுத்த சிஎஸ்கே!

அதீத பேட்டரி... டிச. 24-ல் வெளியாகிறது ரியல்மி நர்ஸோ!

SCROLL FOR NEXT