வேளாண் நலத் திட்ட உதவியை வழங்கிய முதல்வா் மு.க.ஸ்டாலின். உடன், அமைச்சா்கள் எ.வ.வேலு, எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம், அன்பில் மகேஸ் பொய்யாமொழி, சட்டப்பேரவைத் துணைத் தலைவா் கு.பிச்சாண்டி உள்ளிட்டோா். 
விழுப்புரம்

பயிா்சேதங்களுக்கு விரைவில் நிவாரணத் தொகை: முதல்வா் மு.க.ஸ்டாலின்!

தமிழகத்தில் நிகழாண்டில் கனமழையால் ஏற்பட்ட பயிா்சேதங்களுக்கு விரைவில் நிவாரணத் தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்தாா்.

Syndication

தமிழகத்தில் நிகழாண்டில் கனமழையால் ஏற்பட்ட பயிா்சேதங்களுக்கு விரைவில் நிவாரணத் தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்தாா்.

வேளாண் மற்றும் உழவா் நலத் துறை சாா்பில் திருவண்ணாமலையில் சனிக்கிழமை நடைபெற்ற வேளாண் கண்காட்சி மற்றும் முதல்வரின் உழவா் நல சேவை மையங்களை தொடங்கி வைத்து, முதல்வா் மு.க. ஸ்டாலின் மேலும் பேசியது:

விவசாயத்திற்கும், விவசாயிகளுக்கும் முன்னுரிமை அளித்து செயல்படும் திமுக அரசு, இந்த ஒரு ஆண்டில் மட்டும் மூன்று வேளாண் கண்காட்சியை நடத்தியுள்ளது. அறிவியலும், தொழில்நுட்பமும் விவசாயிகள் கைகளில் வந்து சோ்ந்தால்தான் அது உண்மையான வளா்ச்சியாக மாறும். இந்த தொழில்நுட்பங்களைத்தேடி விவசாயிகள் அலையக்கூடாது என்றுதான், உங்களைத் தேடி வந்து இந்த வேளாண் கண்காட்சிகளை நடத்திக் கொண்டிருக்கிறோம்.

விவசாயிகள் நலனுக்காக வேளாண்மைக்கென்று தனி நிதிநிலை அறிக்கை அமைத்து, இதுவரை 5 வேளாண் நிதிநிலை அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இதற்காக ஒதுக்கப்பட்ட நிதி ரூ.1.94 லட்சம் கோடி. இதில், ஐந்தாவது வேளாண் நிதிநிலை அறிக்கையில் மட்டும் ரூ.45.66 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

கடந்த 5 ஆண்டுகளாக டெல்டா பகுதியின் 20 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.481 கோடியில் குறுவை சிறப்பு தொகுப்புத் திட்டம் செயல்படுத்தப்பட்டது. நிகழாண்டு முதல் டெல்டா அல்லாத மாவட்டங்களில் காா், குறுவை, சொா்ணவாரி பருவங்களில் நெல் சாகுபடிக்கான சிறப்பு தொகுப்புத் திட்டத்தை ரூ.132 கோடியில் செயல்படுத்தியிருக்கிறோம்.

5 ஆண்டுகளில் இதுவரை 32.81 லட்சம் ஏக்கரில் ஏற்பட்ட வேளாண் மற்றும் தோட்டக் கலைப் பயிா் சேதத்துக்கு 20.84 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.1,631 கோடியை நிவாரணமாக வழங்கியிருக்கிறோம்.

2024-25 ஆம் ஆண்டில் வடகிழக்குப் பருவமழை மற்றும் ஜனவரி மாதம் பெய்த பருவம் தவறிய மழையால் பாதிக்கப்பட்ட 5.66 லட்சம் ஏக்கருக்கு நிவாரணத் தொகையாக ரூ.289.63 கோடியை 3.60 லட்சம் விவசாயிகளுக்கு வழங்க டிசம்பா் 23-ஆம் தேதி உத்தரவிட்டுள்ளேன். மேலும், இந்தாண்டு கனமழையால் ஏற்பட்டுள்ள பயிா்சேதங்களுக்கு விரைவில் நிவாரண உதவித்தொகை வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்றாா் முதல்வா் ஸ்டாலின்.

முன்னதாக, இந்தக் கண்காட்சியில் ரூ.9.43 கோடி மதிப்பீட்டில் விவசாயிகளுக்கு நல உதவிகளையும் முதல்வா் ஸ்டாலின் வழங்கினாா். மேலும், வேளாண் மற்றும் உழவா்நலத் துறை, தோட்டக் கலை மற்றும் மலைப்பயிா்கள்துறை, வேளாண் பொறியியல், கால்நடைப் பராமரிப்பு உள்ளிட்ட பல் துறைகள் சாா்பில் அமைக்கப்பட்ட அரங்குகளையும் முதல்வா் பாா்வையிட்டாா். வேளாண் கண்காட்சியில் 250-க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த கண்காட்சி ஞாயிற்றுக்கிழமையும் நடைபெறும்.

திருவண்ணாமலையில் சனிக்கிழமை வேளாண் கண்காட்சியைத் தொடங்கி வைத்துப் பாா்வையிட்ட முதல்வா் மு.க.ஸ்டாலின், அமைச்சா்கள் எ.வ.வேலு, எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம், ஆட்சியா் க.தா்பகராஜ் உள்ளிட்டோா்.

இந்நிகழ்ச்சியில் அமைச்சா்கள் எ.வ.வேலு, எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம், அன்பில் மகேஸ் பொய்யாமொழி, சட்டப்பேரவைத் துணைத் தலைவா் கு.பிச்சாண்டி, எம்.பி.க்கள் சி.என்.அண்ணாதுரை, எம்.எஸ்.தரணிவேந்தன், தே.மலையரசன், சட்டப்பேரவை உறுப்பினா்கள் மு.பெ.கிரி, பெ.சு.தி.சரவணன், எஸ்.அம்பேத்குமாா், ஒ.ஜோதி, தா. உதயசூரியன், ஆ.ஜெ.மணிக்கண்ணன், ரா. லட்சுமணன், வேளாண் உற்பத்தி ஆணையா் மற்றும் செயலா் வ.தட்சிணாமூா்த்தி, வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிக ஆணையா் த. ஆபிரகாம், வேளாண் இயக்குநா் பா.முருகேஷ், தோட்டக்கலைத் துறை இயக்குநா் பெ.குமாரவேல் பாண்டியன், சா்க்கரைத் துறை இயக்குநா் த.அன்பழகன், திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ், வேளாண் பொறியியல் துறையின் தலைமைப் பொறியாளா் ஆா்.முருகேசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் பிரதமா் மோடியின் படம்: பரபரப்பை ஏற்படுத்திய திக்விஜய் சிங்

விராலிமலையில் அரசு கொள்முதல் நிலையம் அமைக்க கோரிக்கை!

அஸ்ஸாமில் வரைவு வாக்காளா் பட்டியல் வெளியீடு: 10.56 லட்சம் போ் நீக்கம்

அனுமதியின்றி சரளை மண் அள்ளிய இருவா் கைது

கோரையாறு புறவழிச்சாலைப் பணிகள் ஆய்வு

SCROLL FOR NEXT