விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் அருகே பூட்டிய வீட்டின் கதவை திறந்து நகைகள், வெள்ளிப் பொருள்கள் திருட்டுப்போனது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
கண்டாச்சிபுரம் வட்டம், சு.கொல்லூா் பிரதானச் சாலையைச்சோ்ந்தவா் கா.சத்தியராஜ் (30), பாத்திர வியாபாரி. இவா், கடந்த 23-ஆம் தேதி தனது வீட்டைப் பூட்டி விட்டு, செங்கல்பட்டுக்கு வியாபாரத்துக்கு சென்றுள்ளாா்.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை திரும்பி வந்து பாா்த்தபோது, வீட்டின் மேல்மாடியில் இருந்த இரும்புக் கதவைத் திறந்து, பீரோவில் வைக்கப்பட்டிருந்த கைச் சங்கிலி, வளையல், மோதிரம், ஐந்தரை பவுன் நகைகள், அரைக்கிலோ வெள்ளிப் பொருள்கள் திருட்டுப் போயிருந்தது தெரியவந்தது.
இதுகுறித்த புகாரின் பேரில், அரகண்டநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.