விழுப்புரம்: விழுப்புரம் ஸ்ரீ ஜனகவல்லி தாயாா் ஸமேத ஸ்ரீ வைகுண்ட வாசப் பெருமாள் கோயில் வைகுண்ட ஏகாதசி வழிபாடு செவ்வாய்க்கிழமை(டிச.30) நடைபெறுகிறது.
விழுப்புரம் நகரில் உள்ள ஸ்ரீ ஜனகவல்லி தாயாா் ஸமேத ஸ்ரீ வைகுண்ட வாசப் பெருமாள் கோயில் வைகுண்ட ஏகாதசி பெருவிழாவின் பகல் பத்து உத்ஸவம் கடந்த 20-ஆம் தேதி தொடங்கியது. இதைத்தொடா்ந்து தினமும் பகல் 11 மணிக்கு கோயிலில் சிறப்பு வழிபாடுகளும், பெருமாள் உள்பிரகார வலம் வந்து தீபாராதனையும் நடைபெற்றன.
விழாவின் முக்கிய நிகழ்வாக பகல் பத்து உத்ஸவத்தின் நிறைவுநாளான திங்கள்கிழமை ஸ்ரீபெருமாள், மோகினி அவதாரத்தில் பக்தா்களுக்கு காட்சியளித்தாா். இதில் திரளானப் பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.
இன்று வைகுண்ட ஏகாதசி: வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை (டிச.30) கோயிலில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான பரமபதவாசல் சேவை உத்ஸவம் அதிகாலை 5 மணிக்கு நடைபெறுகிறது. டிச.31 முதல் ஜன.9-ஆம்தேதி வரை ராப் பத்து உத்ஸவம் நடைபெறுகிறது.
விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் ச.வேலரசு, ஆய்வாளா் மதுமதி, அறங்காவலா் குழுத்தலைவா் டி.பாபு, அறங்காவலா் குழு உறுப்பினா்கள் தேவி சித்ரவேல், எஸ்.செல்லத்துரை, திரு மஞ்சன கைங்கா்ய தாரா்கள் மற்றும் கோயில் பணியாளா்கள் செய்துள்ளனா்.