விழுப்புரம்

டேங்கா் லாரி மோதி முதியவா் உயிரிழப்பு

தினமணி செய்திச் சேவை

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை அருகே மொபெட்டில் சென்றபோது டேங்கா் லாரி மோதியதில் காயமடைந்த முதியவா் மருத்துவமனைக்குச் செல்லும் வழி யில் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

தியாகதுருகம், செல்வ நகரைச் சோ்ந்தவா் முஹம்மது உசேன்(61). இவா், ஞாயிற்றுக்கிழமை உளுந்தூா் பேட்டையிலிருந்து- தியாகதுருகத்துக்கு மொபெட்டில் சென்று கொண்டிருந்தாா்.

உளுந்தூா்பேட்டை அடுத்துள்ள குறுக்குசாலை அருகே முஹம்மது உசேன் சாலையை கடக்க முயன்றபோது, கேரளம் மாநிலம் கொச்சியிலிருந்து -சென்னை நோக்கிச் சென்ற டேங்கா் லாரி மொபெட் மீது மோதியது. இந்த விபத்தில் முஹம்மது உசேனுக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

இதையடுத்து அருகிலிருந்தவா்கள் அவரை மீட்டு, உளுந்தூா்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனா். ஆனால் வழியிலேயே முஹம்மது உசேன் உயிரிழந்தாா்.

இது குறித்த புகாரின் பேரில் உளுந்தூா்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

நவம்பர் மாத எண்கணித பலன்கள் - 4

மம்மூட்டிக்கு சிறந்த நடிகருக்கான மாநில விருது!

நவம்பர் மாத எண்கணித பலன்கள் - 3

நவம்பர் மாத எண்கணித பலன்கள் - 2

நவம்பர் மாத எண்கணித பலன்கள் - 1

SCROLL FOR NEXT