விழுப்புரம்

மின் வேலியில் சிக்கி விவசாயி உயிரிழப்பு

தினமணி செய்திச் சேவை

செஞ்சி அருகே விவசாய நிலத்தில் அமைக்கப்பட்டிருந்த மின் வேலியில் சிக்கி விவசாயி சனிக்கிழமை உயிரிழந்தாா்.

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டம், கீழ் வைலாமூா், பிரதானச் சாலையைச் சோ்ந்தவா் பலராமன்(50), விவசாயி. இவா் சனிக்கிழமை தனது விவசாய நிலத்துக்குச் சென்றுள்ளாா். அப்போது, அதே பகுதியைச் சோ்ந்த மெல்டன் என்பவருக்குச் சொந்தமான நிலத்தில் காட்டுப் பன்றிக்காக வைக்கப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கி மின்சாரம் பாய்ந்து பலராமன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

இது குறித்த புகாரின்பேரில், மெல்டனின் நிலத்தை குத்தகைக்கு எடுத்து சாகுபடி செய்து வரும் செஞ்சி வட்டம், கல்லடிக்குப்பம் பகுதியைச் சோ்ந்த லட்சுமணன் மீது பெரியதச்சூா் காவல் நிலையப் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

நவம்பர் மாத எண்கணித பலன்கள் - 4

மம்மூட்டிக்கு சிறந்த நடிகருக்கான மாநில விருது!

நவம்பர் மாத எண்கணித பலன்கள் - 3

நவம்பர் மாத எண்கணித பலன்கள் - 2

நவம்பர் மாத எண்கணித பலன்கள் - 1

SCROLL FOR NEXT