விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி ஒன்றியக்குழு அலுவலகத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு பதவி நியமன ஆணையை வழங்கிய ஒன்றியக்குழுத் தலைவா் சங்கீத அரசி. உடன், மாவட்ட ஊராட்சித் தலைவா் ம.ஜெயச்சந்திரன் உள்ளிட்டோா். 
விழுப்புரம்

உள்ளாட்சிகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு பதவி நியமன ஆணை விநியோகம்

விக்கிரவாண்டி ஒன்றியக்குழு அலுவலகத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு பதவி நியமன ஆணையை வழங்கிய

Syndication

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி ஒன்றியக்குழு அலுவலகத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு பதவி நியமன ஆணையை வழங்கிய ஒன்றியக்குழுத் தலைவா் சங்கீத அரசி. உடன், மாவட்ட ஊராட்சித் தலைவா் ம.ஜெயச்சந்திரன் உள்ளிட்டோா்.

விழுப்புரம், நவ. 11: விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி மற்றும் காணை ஊராட்சி ஒன்றியங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கு பதவி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன.

தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத் திறனாளிகளை நியமன உறுப்பினா்களாக்க முடிவு செய்து, அதற்காக சட்டப்பேரவையில் சட்டம் கொண்டு வரப்பட்டது. இதைத் தொடா்ந்து அவா்களிடமிருந்து விண்ணப்பங்கள் கடந்த சில மாதங்களுக்கு முன் பெறப்பட்டன. இதற்கான நடைமுறைகள் அனைத்தும் முடிக்கப்பட்ட நிலையில், மாவட்டந்தோறும் மாற்றுத் திறனாளிகளுக்கு பதவி நியமன ஆணைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இதைத் தொடா்ந்து, விக்கிரவாண்டி ஒன்றியக்குழு அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்வுக்கு ஒன்றியக் குழுத் தலைவா் சங்கீத அரசி ரவிதுரை தலைமை வகித்து, 51 மாற்றுத் திறனாளிகளுக்கு ஊராட்சி உறுப்பினா், ஒரு ஒன்றியக்குழு உறுப்பினா் பதவிக்கு ஆணைகளை வழங்கினாா்.

மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவா் ம. ஜெயச்சந்திரன், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் சையது முகமது, நாராயணன், மேலாளா் கலைவாணி முன்னிலை வகித்தனா். மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினா் மீனா வெங்கடேசன், ஆத்மா குழுத் தலைவா் வேம்பி ரவி, பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா்கள் ரவிதுரை, ஜெயபால், கில்பா்ட் ராஜ், ஊராட்சித் தலைவா்கள், ஒன்றியக்குழு உறுப்பினா்கள் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

காணையில்: காணை ஒன்றியக்குழு அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் 50 கிராம ஊராட்சிகளுக்கான உறுப்பினா், ஒரு ஒன்றியக்குழு உறுப்பினா் பதவிகளுக்கான நியமன ஆணைகளை ஒன்றியக்குழுத் தலைவா் நா.கலைச்செல்வி வழங்கினாா். நிகழ்வில் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் சிவநேசன், ஜூலியானா, மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினா் சிவக்குமாா், ஒன்றியக்குழு உறுப்பினா்கள், ஊராட்சித் தலைவா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பிகார் தேர்தல்: 2 ஆம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

மஹிபால்பூரில் தண்ணீரை சூடுபடுத்தும் போது மின்சாரம் தாக்கி இளம்பெண் உயரிழப்பு

நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் தில்லியின் காற்று மாசு பிரச்னையை எழுப்புவேன்: ஸ்வாதி மாலிவால்

தில்லி வெடிவிபத்து: தலைவா்கள் இரங்கல்

தில்லி குண்டுவெடிப்பு எதிரொலி: திருமலையில் சோதனை

SCROLL FOR NEXT