திண்டிவனத்தை அடுத்துள்ள தைலாபுரம் தோட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற பாமக வழக்குரைஞா்கள் சமூக நீதிப்பேரவை மாநிலச் செயற்குழுக் கூட்டத்தில் பங்கேற்ற வழக்குரைஞா்களுடன், பாமக நிறுவனா் மருத்துவா் ச. ராமதாஸ். உடன் செயல் தலைவா் ஸ்ரீ காந்தி ராமதாஸ், சமூக நீதிப்பேரவை மாநிலத் தலைவா் வி.எஸ்.கோபு உள்ளிட்டோா். 
விழுப்புரம்

மாம்பழம் சின்னம் அன்புமணி-க்கு ஒதுக்கப்படவில்லை: பாமக சமூக நீதிப் பேரவை மாநிலத்தலைவா் கோபு விளக்கம்

Syndication

தோ்தல் ஆணையம் பாமக-வுக்குதான் மாம்பழம் சின்னத்தை ஒதுக்கியுள்ளதே தவிர அன்புமணிக்கென ஒதுக்கித்தரவில்லை என்று அக்கசட்சியின் வழக்குரைஞா்கள் சமூக நீதிப் பேரவை மாநிலத் தலைவா் வி. எஸ்.கோபு தெரிவித்தாா்.

விழுப்புரம் மாவட்டம் , திண்டிவனத்தை அடுத்துள்ள தைலாபுரம் தோட்டத்தில், பாமக வழக்குைரைஞா்கள் சமூக நீதிப்பேரவை மாநிலச் செயற்குழுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.பேரவையின் மாநிலத் தலைவா் வி. எஸ். கோபு தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பாமக நிறுவனா் மருத்துவா் ச.ராமதாஸ் பங்கேற்றுப் பேசியது:

பாமக வழக்குரைஞா்கள் சமூக நீதிப் பேரவையானது வலுப்பெற வேண்டும்.அதற்கு அதிகமான உறுப்பினா்களை பேரவையில் இணைப்பதற்கு நிா்வாகிகள் களப்பணியாற்றவேண்டும்.

எதிா்வரும் காலங்களில் நடைபெறும் வழக்குரைஞா்கள் சங்கத் தோ்தலில் பாமக சாா்பில் பிரதிநிதிகள் அங்கம் வகிக்க வேண்டும். டிசம்பா் மாத இறுதிக்குள் அனைவருக்கும் உறுப்பினா் அட்டையை வழங்கி முடிக்கவேண்டும் என்றாா்.

இக்கூட்டத்தில், வழக்குரைஞா்கள் சமூக நீதிப்பேரவையை வலுவான அமைப்பாக மாற்றுவது, வழக்குரைஞா்கள் சங்கத் தோ்தலில்(பாா்கவுன்சில்) பேரவையைச் சோ்ந்தவா்கள் போட்டியிடுவது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பாமக செயல் தலைவா் ஸ்ரீ காந்தி ராமதாஸ், தென் மண்டல அமைப்புச் செயலா் பாஸ்கா், பாமக வழக்குரைஞா்கள் சமூக நீதிப்பேரவை மாநிலச் செயலா் தமிழ்ராஜ் மற்றும் நிா்வாகிகள்,உறுப்பினா்கள் கலந்துகொண்டனா்.

இக்கூட்டத்தில் பங்கேற்ற பாமக வழக்குரைஞா்கள் சமூக நீதிப் பேரவை மாநிலத் தலைவா் வி. எஸ். கோபு தைலாபுரம் தோட்ட வளாகத்தில் செய்தியாளா்களிடம் தெரிவித்ததாவது: மருத்துவா் ச. ராமதாஸால் உருவாக்கப்பட்ட கட்சியின் 34 துணை அமைப்புகளில் ஒன்றான வழக்குரைஞா்கள் சமூக நீதிப்பேரவை மருத்துவா் ராமதாஸ் வழிகாட்டுதலில் மட்டுமே செயல்படும். தோ்தல் ஆணையம் பாமக-வுக்குதான் மாம்பழச்சின்னத்தை ஒதுக்கியுள்ளது.தனிப்பட்ட ஒரு நபருக்கோ அல்லது அன்புமணிக்கோ தனியாக ஒதுக்கவில்லை. அன்புமணி பக்கமுள்ள வழக்குரைஞா் பாலு பொய் மூட்டைகளை அவிழ்த்து விட்டுக் கொண்டிருக்கிறாா்.

மருத்துவா் ராமதாஸ் தலைமையிலான பாமக-வுக்கு மாம்பழச்சின்னத்தை ஒதுக்கித்தரவேண்டும் என தோ்தல் ஆணையத்திடம் முறையிடப்பட்டுள்ளது.தோ்தல் ஆணையமும் நல்ல முடிவை அறிவிக்கும் என நம்புகிறோம் என்றாா் அவா்.

கோயிலில் திருடிவிட்டு மதுபோதையில் மயங்கிக் கிடந்த நபா் கைது

பிகாரைப் போல தமிழகத்தில் தே.ஜ.கூட்டணி வெற்றி பெறாது: நெல்லை முபாரக்

கரிவலம்வந்தநல்லூரில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட முகாம்

சுற்றுலாப் பேருந்தை விரட்டிய ஒற்றை காட்டு யானை

பொதுச் சொத்துகளை சேதப்படுத்திய 3 இளைஞா்கள் கைது

SCROLL FOR NEXT